ஆனால் அந்த பயிற்சிகளை அனைவருமே செய்ய முடியாது. ஆகவே மக்களுள் பலர் நடைப்பயிற்சியைத் தான் பெரும்பாலும் தேர்ந்தெடுக்கின்றனர். அதிலும் அந்த நடைப்பயிற்சியை ஒரு சீரியஸ் இல்லாமல் சாதாரணமாக செய்கின்றனர். எனவே அவர்களால் உடல் எடையை குறைக்க முடியவில்லை. ஏனெனில் சாதாரணமாக செய்தால், எந்த பயனும் இல்லை. ஆனால் அதையே நன்கு சுறுசுறுப்போடு, தினமும் அரை மணிநேரம் செய்தால் உடலில் இருந்து 150 கலோரிகள் கரையும். அதிலும் தொடர்ந்து அந்த மாதிரியான நடைப்பயிற்சி மற்றும் உணவில் கட்டுப்பாட்டுடன் இருந்தால், ஒரு வாரத்தில் 1 பவுண்ட் கலோரிகள் கரைந்துவிடும்.
எனவே உடல் எடையை குறைக்க எந்த மாதிரியான நடைப்பயிற்சியை மேற்கொண்டால், உடல் பருமன் குறைந்து, அழகான தோற்றத்தில் காணப்படலாம் என்பதை சற்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்…
* காலையில் நடைப்பயிற்சியை மேற்கொள்ளும் போது பெருபாலோனோர் ஒரு கூட்டமாக சேர்ந்து பேசிக் கொண்டே செய்வார்கள். அந்த நேரம் நடைப்பயிற்சியை விட வாய் பேச்சு தான் அதிகமாக இருக்கும். ஆகவே உடல் எடை குறைய வேண்டுமென்று ஆசைப்பட்டால், தனியாக செய்வது தான் நல்லது. இதனால் நீங்கள் உங்கள் வழியில் செய்யலாம்.
* நடக்கும் போது மெதுவாக செல்லக் கூடாது. முதல் நாள் ஒரு வேகத்தில் நடந்தால், மறுநாள் அதை விட சற்று வேகமாக நடக்க முயற்சிக்க வேண்டும். அதற்காக எப்போதுமே வேகமாக நடக்க வேண்டாம். பின் உடல் சோர்ந்துவிடும். இல்லையெனில் சிறிது நேரம் மெதுவாக நடந்தால், சிறிது நேரம் வேகமாக நடக்க வேண்டும்.
* நடக்கும் பாதையை வேண்டுமென்றால் மாற்றலாம். உதாரணமாக மலைப்பகுதி. ஏனெனில் இந்தப் பகுதியில் நடந்தால், உடலில் உள்ள லிபிட் செல்களுக்கு அதிக அழுத்தம் ஏற்பட்டு, அவை வெடித்துவிடும். மேலும் தசைகளும் சற்று வலுவடையும். ஆகவே நடைப்பயிற்சி உடல் எடையை மட்டும் குறைக்காமல், தசையையும் வலுபடுத்தும்.
* தொடர்ந்து நடக்க வேண்டும். அதாவது, காலையில் நடந்தால், மாலையில் எந்த வேலையும் இல்லை, வேகமாக எடை குறை வேண்டும் என்பதற்காக மறுபடியும் மாலையில் நடக்கக்கூடாது. காலையில் நடந்தால், மீண்டும் மறுநாள் காலையில் தான் செய்ய வேண்டும். அப்படி செய்தால் தான், சரியான பலனைப் பெற முடியும்.
* நடைப்பயிற்சி உடல் எடையை குறைக்க ஒரு சிறந்த உடற்பயிற்சி. அதிலும் நடைப்பயிற்சியால் உடல் எடை குறைவது தாமதமாக இருப்பது போன்று உணர்ந்தால், அப்போது அந்த நடைப்பயிற்சியிலேயே சற்று கடினமாகவற்றை தேர்ந்தெடுத்து செய்ய வேண்டும். அதாவது, நடைப்பயிற்சியை கடினமான வழியான மணல் அல்லது நீரில் மேற்கொள்வதால், உடலில் அழுத்தம் ஏற்பட்டு, கொழுப்புக்கள் எளிதில் கரைந்துவிடும். உடல் எடையும் விரைவில் குறையும்.
* நடைப்பயிற்சி எந்த ஒரு கடினமான உடற்பயிற்சி இல்லை. ஆனால் நாம் கலோரி குறைவான உணவை உண்டால், நிச்சயம் இது ஒரு சிறந்த ஒரு உடற்பயிற்சியாக அமையும்.
எனவே மேற்கூறியவாறெல்லாம் செய்தால், உடல் எடை எளிதில் குறைந்து, உடல் சிக்கென்று அழகாக ஆரோக்கியமாக இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக