Pages

புதன், மார்ச் 27, 2013

முன்னோர்களின் தொழில் நுட்பம்


Qinghai(Province,China) ஃகுங்கய்  அல்ல செங்க்காய் மாநிலம், சீனாவின் திபெத் எல்லையை துவங்கி மத்திய சீனம் வரை இதன் எல்லை விரிகிறது. இயற்கையின் அத்தனை அழகையும் தன்னுள் கொட்டி வைத்த இந்த மாநிலம் பல பெருமைகள் உண்டு உலகிலேயே மிகவுயர்ந்த ரெயில் பாதை இந்த மாநிலத்தின் வழியாக செல்கிறது, இந்த மாநிலத்தில் பல பகுதிகளில் குளிர்காலங்களில் மூன்று மீட்டர் அளவிற்கு பனி உறைந்து விடும், அப்படிப்பட்ட பகுதிகளில் ரெயில் பாலமும் அமைக்க முடியாது, அந்த இறுக்கத்தில் காங்கிரீட் கீறி வெடிப்புகள் விழுந்து பாலம் சிதைந்து போகும், தரையில் தண்டவாளம் அமைத்தால் பனிக்கட்டிகள் மூடிவிடும் பிறகு எப்படி ரெயில் பாதை அமைத்தார்கள்,

    மிகவும் எளிதான ஒரு வழியை கண்டறிந்தார்கள், அதாவது பனிக்கட்டி எவ்வளவு உயர சேருகிறதோ அந்த அளவு தரைப்பகுதி வெப்பமடையும்,(குளிர்காலங்களில் நிலத்தடி நீர் சூடாக வருவதை கவனிக்கவும்) தரையில் இடைவெளிவிட்டு பல அதிதூர துளைகள் இட்டு அதில் மரத்தூள்களை போட்டு  பனிக்கட்டி உறையும் உயரத்தை விட ஒரு உயரமாக ஜல்லிகள் தளம் அமைத்தார்கள், இதன் காரணமாக  அந்த கோடைகாலங்களில் சரியான வெப்பம் இருக்கும் குளிர்காலங்களில் குளிர்காற்று ஜல்லிகள் இடைவெளி வழியாக உள்ளே செல்லும் போது பூமியில் உள்ள வெப்பக்காற்று அந்த இடத்தை சமன் செய்ய வெளிவருகிறது இதன் காரணமாக வெப்பம் என்றும் குளிர்காலங்களில் கூட 12செல்சியஸ் வெப்பநிலை வந்து விடும் இதனால் பனிக்கட்டி உறையாமல் அந்த இடம் மட்டும் பாதுகாப்பாக இருக்கும் (இதன் அருகில் -15 செல்சியஸ் கடும் குளிர் நிலவும்) ரெயில் செல்லும் போது ஜல்லிகள் தளம் சரிந்து விபத்து நடந்து விடாமல் இருக்க வலை பின்னல் ஒன்றை இருக்கினார்கள், இதற்கு செல்லுலோஸ் மற்றும் சோற்று கஞ்சி, உருளைக்கிழங்கில் கிடைக்கும் ஸ்டார்ச்சை பயன்படுத்தி வைக்கோல்களை அதனுடன் ஊறவைத்து உறுதியான கயிறுகளை செய்தார்கள், காரணம் இங்கும் எந்த உலோக கம்பிகளை பயன்படுத்தினாலும் குளிர் காலத்தில் இறுகியும் கோடைகாலத்தில் இளகிவிடும், அதனால் அதிவேக ரெயில் செல்லும் போது பெரும் விபத்து ஏற்படலாம், ஆனால் பதப்படுத்தப்பட்ட வைக்கோல் எந்த காலச்சூழலிலும் தனது இறுக்கத்தை விடாது மேலும்  இதை தயாரிக்க செலவு என்று பார்த்தால் அங்கு வேலை செய்பவர்களுக்கு மாதம்  சாப்பாட்டிற்கு செய்யும் செலவை விட குறைவு. (படம் பார்க்க)

         இந்த தொழில் நுட்பத்தை எங்கிருந்து எடுத்தார்கள், இதை முன்பு யார் பயன்படுத்தினார்கள். வேறொன்றுமில்லை அதன் அருகிலேயே பரந்து விரித்த சீனப்பெருஞ்சுவர் இந்த தொழில் நுட்பத்தில் தான் (கி மு இரண்டாம் நூற்றாண்டில்) கட்டப்பட்டது, சுமார் 13 கடுமையான நிலநடுக்கங்களை கடந்தும் இன்றும் உறுதிபட நிற்கிறது.  இன்று உலகின் ஆபத்து மிக்க பகுதியில் அதிவேக ரெயில் விட்ட சீனர்களில் முன்னோர்கள் தான் இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தினார்கள்.

கருத்து: நாம் நமது முன்னோர்கள் காட்டிய வழியை பின்பற்றவேண்டும் எப்போது? அது நமது புதிய தொழில் நுட்பத்தில் பயன்பட்டு சமுதாயம் வளர்ச்சிக்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் உதவும் போது மட்டுமே! ஆனால் நாம் திருநாறு பூசுவதற்கும் மின்னல் வந்தால் அர்ச்சுனா என்று சொல்லணும் என யாரோ விட்ட கதையை பிடித்துக்கொண்டு எங்க முன்னோர்கள் எவ்வளவு திறமையானவர்கள் அறிவியலில் எங்கேயோ போனவர்கள், கோபுர கலசத்தில் வரகை கொட்டி மின்னலை கட்டுப்படுத்தும் டெக்னாலஜியை கண்டு பிடித்தான் பாரு, தம்லர்ஸ் ராக்ஸ் என்கிறோம், நம்மை விட நீக்ரோக்கள் பரந்த நெற்றியை உடையவர்கள் அவர்கள் வாழும் பகுதியில் வெப்பம் அதிகம் அவர்கள் திருநாறு பூசாத காரணத்தால் அவர்களை தலையில் நீர் புகுந்து ஓடி அவர்கள் இனமே அழிந்து விடவில்லையே, குரங்கு நம்மை விட பெரிய அளவில் கொட்டாவி விடும் அது கானகத்தில் வாழும் ஆனால் இடி மின்னல் விழுந்தால் அது என்ன சொல்லும்? வரகை கொட்டி கோபுர கலசத்தில் வைத்தால் இன்றைய தலைமுறைக்கு என்ன லாபம்,

  தேவையில்லாததை பிடித்துக்கொண்டு எக்காலத்திலும் தேவையான  எம்பாட்டன் கூறிய குறளை  எல்லாம் சிற்றின்ப நூல் என்று கூறி அதை விலக்கி வைத்தார்கள், 

"எப்பொருள் யார்யார் வாய் கொட்பினும் மெய்பொருள் காண்பதறிவு"  

கருத்துகள் இல்லை: