காட்டுவாசிகளாக வாழ்ந்த காலத்தில் அழகுக்கு முக்கியத்துவம் இல்லா மல் இருந்தது. ஆனால் மனித இனத்தில் மெல்ல
மெல்லா நாகரீகம் வளர வளர தன்னை அழகுப டுத்திக்கொள்ள வேண்டும் என்ற தீராத வேட்கை யும் வளர்ந்துகொண்டே வந்தது. இயற்கையான கிடைக்கக்கூடிய பொருளை கொண்டு அழகை பராமரித்த காலம்போய் செயற்கை இரசாயன மற்றும் நிறமிகளை பயன்படுத்துகின்றனர். இதனால் பக்கவிளைவுகளும் பின்விளைவுகளும் ஏராளமானவந்து அவர்களின் ஆரோக்கியத்திற்கே வேட்டுவைத்தும் அவர்களின்அழகையும் குலை த்துவிடுகின்றன. செயற்கை, இரசாயன, மற்றும் நிறமிகளை பயன்படுத்துவதை முற்றிலும் தவி ர்க்க வேண்டும்.
தற்போதுநாம் இங்கு கண்களுக்குகீழே அழை யா விருந்தாளியாக வந்திருக்கும் கருவளையத் தை இயற்கை பொருள் கொண்டு எப்படி நீக்குவது என்பது பற்றி பார்க்கவிருக்கிறோம்.
கருவளையம்நீங்க விரைவான, பாதுகாப்பான , எளியவழி வெள்ளரிக்காயைப் பயன்படுத்து வதுதான். வெள்ளரியில்உள்ள ஆன்டி ஆக்ஸி டன்ட் மற்றும் சிலிக்கா இணைந்து, சருமத்துக்குப் புத்துணர்வூட்டி கரு வளையத்தைபோக்குகின்றன. வெள்ளரிக்காயைக் கத்தரித்து, கண்கள்மேல் 20 நிமிடங்கள் வைத்திருப் பது அல்லது வெள்ளரிச் சாற்றைப் பருத்தியில் நனை த்து, கண்களின் மீது 20 நிமிடங்களுக்கு வைத்திருப் பது நல்ல பலன் தரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக