Pages

வியாழன், அக்டோபர் 22, 2015

விண்ணில் நாள்களைக் காண்போம்


விண்ணில் நாள்களைக் காண்போம்
கோள்களை நாம் நமது வெறும் கண்களால் காணலாம். இவை பார்ப்பதற்கு நட்சத்திரங்களைப் போன்று தோற்றமளிக்கும். ஆனால் நட்சத்திரங்கள் போன்று மினுமினுக்காது. தொடர்ந்து திடமான ஒளியைக் கொடுக்கும். கோள்கள் அனைத்தும், ஞாயிறு (சூரியன்) திங்கள் (சந்திரன்) பயணம் செய்யும் பாதையிலேயே தெரியும். தினசரி நாட்காட்டிகளில் உள்ள ராசிக்கட்டத்தைப் பயன்படுத்தி கோள்கள் விண்ணில் தெரியும் இடத்தைத் தெரிந்து கொள்ளலாம்.
ஐப்பசி 5ஆம் நாள் (22.10.2015) வியாழக்கிழமை உள்ள ராசிக் கட்டத்தில் உள்ளபடி, ஞாயிறு உதிப்பதற்கு முன் வெள்ளி, வியாழன், செவ்வாய் ஆகிய கோள்கள் உதித்து வானில் தெரியும். இனிவரும் நாட்களில் படத்தில் உள்ளது போன்ற வடிவில் கிழக்கு திசையில் இவற்றைக் காணலாம்.
அதிகாலை ஞாயிறு(சூரியன்) உதயத்திற்கு முன், மணி 4.00 முதல் 5.30 வரை, கிழக்கே தொடுவானத்திற்குச் சற்று மேலே மிகவும் ஒளியுடன் ஒரு பெரிய நட்சத்திரம் போன்று வெள்ளி கோள் தெரியும். அதற்குச் சற்று கீழே சற்று குறைவான ஒளியுடன் வியாழனைக் காணலாம். அதற்கும் சற்று கீழே மிகவும் குறைந்த ஒளியுடன் செவ்வாய் கோள் தெரியும். வெள்ளியும் வியாழனும் நன்கு பிரகாசமாகத் தெரியும். பைனாக்குளர் வைத்திருப்பவர்கள் அதன்வழியாகப் பார்த்தால் நன்கு தெரியும்.
புதனும் சனியும் ஞாயிற்றுடன் சேர்ந்துள்ளதால் இவ்விரு கோள்களையும் நாம் காணமுடியாது.
வியாழனின் பெயர்கள்
அந்தணன் , அமச்சன், அரசன், ஆசான், ஆண்டளப்பான், குரு, சிகண்டிகன், சீவன், சுரகுரு, தராபதி, தெய்வமந்திரி, நற்கோள், பிரகஸ்பதி, பீதகன், பொன், மறையோன், வேதன், வேந்தன்.
வியாழ பகவான் துதி
பெருநிறை செல்வமேன்மை புகழ்ந்திடுஞ் சுகங் கல்யாணம்
வருநிறை மரபுநீடி வாய்க்குஞ் சந்ததி தழைக்க
தருநிறை யாடை ரத்தினந்தான் பெறவருளுந் தேவ
குருநிறை வியாழன் பொற்றாள் குறைகழற்றலைக் கொள்வோமே.
வெள்ளியின் பெயர்கள்
சுரர், மந்திரி, அநாவிலன், ஆசான், உசனன், ஒள்ளியோன், கவிகாப்பியன், சல்லியன், சிதன், சீதகன், சுங்கன், தைத்தியமந்திரி, நற்கோள், பளிங்கு, பார்க்கவன், பிரசுரன், பிருகு, புகர், புயல், மழைக்கோள், வெள்ளி
சுக்கிர பகவான் துதி
திரைகடல்சூழும் பூமிதனில் வளருயிர்கட் கெல்லாம்
நிரைதரும் யோகபோக நீடியமனைவி யின்பம்
தரைபுகழ் வாகனங்கள் தக்கதோர் சுகத்தை நல்கும்
மறைமொழி புகரின் பொற்றாள் மலரடி தலைக் கொள்வோமே.
 

கருத்துகள் இல்லை: