Pages

ஞாயிறு, அக்டோபர் 18, 2015

பஹ்ரைன்-திருச்சிக்கு விமானம் விட கல்ப் ஏர் திட்டம்: வாக்கெடுப்பில் பங்கேற்கலாமே

பஹ்ரைனைச் சேர்ந்த கல்ப் ஏர் நிறுவனம் திருச்சிக்கு விமானத்தை இயக்க திட்டமிட்டுள்ளது. பஹ்ரைனில் உள்ள முஹாரக் நகரை தலைமையிடமாகக் கொண்டு கல்ப் ஏர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. பஹ்ரைனில் இந்தியர்கள் அதுவும் தமிழர்கள் அதிக அளவில் பணியாற்றி வருகிறார்கள். தமிழர்களில் பெரும்பாலானவர்கள் தென் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இந்நிலையில் கல்ப் ஏர் பஹ்ரைனில் இருந்து திருச்சிக்கு நேரடி விமானத்தை இயக்க திட்டமிட்டுள்ளது. திருச்சிக்கு நேரடி விமானம் விடுவது குறித்து அந்நிறுவனம் வாக்கெடுப்பு நடத்தி வருகிறது. அந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் http://gulfaircampaign.digeelabs.com/ இங்கே கிளிக் செய்யவும். இந்த வாக்கெடுப்பில் கலந்து கொண்டு திருச்சிக்கு விமானம் விடுமாறு கருத்தை பதிவு செய்யுமாறு பஹ்ரைனில் வசிக்கும் தமிழர்கள் சக தமிழர்களை கேட்டுக் கொண்டுள்ளனர். திருச்சிக்கு செல்லாதவர்களாக இருந்தாலும் அங்கு செல்பவர்களின் நலன் கருதி வாக்கெடுப்பில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை: