இல்லை! இல்லை! என்னால் நம்ப முடியவில்லை!
இவரா சொன்னார்! இருக்காது.. அப்படி எதுவும் நடக்காது!
நடக்கவும் கூடாது!
இனிப்பே இல்லாத வாழ்க்கை சுவைக்காது!
இனி இனிப்பென்பதே இனிக்கப்போவது இல்லை!
இதழில் சுவைத்துவிட்டால் பெரும் தொல்லை!
இனிப்பை மறந்து விட்டால் கவலைகள் இல்லை!
இந்த உண்மைதான் நம் கசப்பின் எல்லை!
இல்லை! இல்லை! என்னால் நம்ப முடியவில்லை!
இவரா சொன்னார்! இருக்காது.. அப்படி எதுவும் நடக்காது!
நடக்கவும் கூடாது!
இனிப்பே இல்லாத வாழ்க்கை சுவைக்காது!
மேற்கில் கூட சூரியன் உதிக்கலாம்..
நீரின் மேலே கூட யாரும் நடக்கலாம்..
நெருப்பும் கூட என்னைத் தொடவும் அஞ்சலாம்.
நிலவில் கூட யாரும் வசிக்கலாம்.. காணும்
கனவுகள் எல்லாம் கையில் நனவும் ஆகலாம்...
ஆனால்...
இனிப்பு மட்டும் எப்படி இல்லாமல் போகலாம்..
இல்லை! இல்லை! என்னால் நம்ப முடியவில்லை!
இவரா சொன்னார்! இருக்காது.. அப்படி எதுவும் நடக்காது!
நடக்கவும் கூடாது!
இனிப்பே இல்லாத வாழ்க்கை சுவைக்காது!
( இது கொஞ்சம் ஓவரா இல்லை?)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக