Pages

செவ்வாய், ஏப்ரல் 21, 2015

முட்டை கவ்யம். (Organic Terrace Garden)

முட்டை கவ்யம். (Organic Terrace Garden)
காய்கறித் தோட்டம், மாடித்தோட்டம் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு.
கேரளாவில் ஆர்கானிக் தொழில்நுட்பத்தில் இந்த முட்டைகவ்யம் பயன்படுத்தி நல்ல பலன் கிடைத்திருக்கிறதாம். காய்கறி முதல் எல்லாச் செடிகளுக்குமான வளர்ச்சி ஊக்கியாக இது பயன்படுகிறது என்று படித்தேன். இனிமேல்தான் செய்து பார்க்கவேண்டும்.
இரண்டு அல்லது மூன்று நாட்டு முட்டைகளை (ஆர்கானிக் உத்தமம்) உடைக்காமல் அப்படியே முழுதாக ஒரு பாட்டிலில் போட்டு அதன் மீது 15-16 நன்கு பழுத்த எலுமிச்சை பழங்களை பிழிந்து அதன் சாறினை முழு முட்டைகளை முழுவதுமாக மூழ்குமாறு ஊற்றி, நன்றாக மூடி, வெயில் படாத இடத்தில் 18 நாட்களுக்கு நன்றாக காற்றுப் புகா வண்ணம் மூடி ஊற வைக்க வேண்டும்.
இந்த 18 நாளில் முட்டையின் கால்சியம் ஓடு நன்றாகக் கரைந்து முழுவதுமாக எலுமிச்சைச் சாற்றில் கலந்துவிட்டிருக்கும். இப்பொழுது அதைத் திறந்து நன்றாகக் கலக்கவேண்டும். 250கிராம் வெல்லத்தை நன்றாக தூளாக்கி இந்தக் எலுமிச்சை, முட்டைக் கலவையுடன் சேர்த்துக் கலக்க வேண்டும்.
இந்தக் கலவையை மேலும் பத்து நாட்களுக்கு அப்படியே ஊற வைக்க வேண்டும். இப்பொழுதும் வெயில், வெப்பம் படாத இடத்தில் வைக்க வேண்டும். மூன்று நாட்களுக்கு ஒருமுறை தேவைப்பட்டால் மூடியைத் திறந்து வாயுவை வெளியேற்றலாம்.
மொத்தமாக 28 -30 நாட்கள் ஆகி இருக்கும், இந்தக் கலவையிலிருந்து 2 எல் எல் எடுத்து, அதை ஒரு லிட்டர் தண்ணீருடன் கலந்து செடிகளின் மீது வாரம் ஒருமுறை தெளிக்கலாம். இதனால் செடிகளுக்குத் தேவையான நுண்ணுயிர்கள் அதிகரித்து, செடி நன்றாகப் பூப்பதோடு நல்ல வளர்ச்சியும் அடைகிறதாம்.

கருத்துகள் இல்லை: