முதலுதவிப் பெட்டியில் என்னென்ன பொருட்கள் தேவை:
சுத்தமான ஒட்டக்கூடிய பேண்டேஜ்கள் - பல அளவுகளில்
பேண்டேஜ் துணி ரோல்கள்
ஒட்டும் டேப்புகள்
முக்கோண, மற்றும் ரோலர் பேண்டேஜ்கள்
பஞ்சு (1 ரோல்)
பேண்ட் எய்ட்- பிளாஸ்டர்
கத்திரிக்கோல்
சிறியடார்ச்
தெர்மோ மீட்டர்
லேடெக்ஸ் கையுறைகள் (2 ஜோடிகள்)
சிறிய கிடுக்கிகள்
ஊசி
ஈரப்பதம் கொண்ட டவல்கள், சுத்தமான, உலர்ந்த துணிகளின் துண்டுகள்
ஆன்ட்டி செப்டிக் (சவ்லான், டெட்டால்)
பெட்ரோலியம் ஜெல்லி ட்யூப்
ஊக்குகள் – பல அளவுகளில்
சுத்தப்படுத்தும் கரைசல் அல்லது சோப்
மருந்துகள்:
ஆஸ்பிரின் அல்லது பாரசட்டமால் வலி நிவாரணிகள்
வயிற்றுப் போக்கை நிறுத்தும் மருந்து
பூச்சிக்கடி, தேனீக்கள் கொட்டுதல் ஆகியவற்றுக்கான ஆண்டிஹிச்டமீன் க்ரீம்.-Calamine lotion
ஆண்டாசிட் (வயிற்றுப் போக்குக்கு)
லக்ஸேட்டிவ்
ஆன்டி பயாடிக் ஆயின்மென்றுகள்
Hydrogen peroxide
தீப்புண்ணுக்கான களிம்பு
Children's acetaminophen
Smelling salt
அவசர நிலையில் உள்ள காயம் பட்ட நோயாளிக்கு முதலில் சுவாசம் தடைபடாமல் பார்த்துக்கொள்வது மிக முக்கியம். நாக்கு அல்லது வாயிலிருந்து வரும் கோழை மூச்சு திணறலை உண்டாக்கலாம். நோயாளியால் சரியாக சுவாசிக்க முடியாவிட்டால் உடனே செயற்கை சுவாசம் கொடுக்க வேண்டியது அவசியம்.
நோயாளியின் நாடித்துடிப்பு சீராக இருக்கிறதா? இரத்தம் அதிகமாக வெளியேறுகிறதா? எனப் பார்க்கவும். இரத்தம் வெளியேறிக் கொண்டிருந்தாலோ, நோயாளி விஷம் சாப்பிட்டிருந்தாலோ, இதயம் அல்லது மூச்சு நின்றாலோ விரைந்து செயல் பட வேண்டும். பாதிக்கப்பட்டவரின் வினாடிகள் எண்ணப்படும் நேரம் அது.
காயம் பட்டவரை உடனே தூக்கிச் செல்ல வேண்டியிருந்தாலும் கழுத்து அல்லது முதுகுத்தண்டில் காயம் பட்டிருந்தால் மருத்துவ உதவி வரும் வரை அசையாமல் கிடத்தியிருப்பது தான் நல்லது. அல்லது நிலமை மேலும் மோசமாகி விடும்.
அவர் வாந்தியெடுத்தால் கழுத்து முதுகுத் தண்டில் அதிக பாதிப்பில்லை எனக் கருதலாம். ஒருக்களித்து படுக்க வைத்து போர்வையால் சுற்றி கதகதப்பாக வைக்கவும்
அவர் வாந்தியெடுத்தால் கழுத்து முதுகுத் தண்டில் அதிக பாதிப்பில்லை எனக் கருதலாம். ஒருக்களித்து படுக்க வைத்து போர்வையால் சுற்றி கதகதப்பாக வைக்கவும்
ஒருவர் முதலுதவி செய்து கொண்டிருக்கும் போதே மற்றொருவர் மருத்துவ உதவிக்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டும். மருத்துவ உதவிக்கு அழைப்பவர் நோயாளியின் அவசரத் தன்மையை எடுத்துக்கூறி உதவி வந்து சேரும் வர அதற்கு என்ன செய்ய வேண்டும் என கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். உதவி தேவைப்படும் இடத்தையும் தெளிவாக எடுத்துக்கூறவும். நீங்கள் பதற்றப் படாமல் இருப்பது அவசியம். நோயாளியையும் பதற்றப் படாமல் ஆறுதல் படுத்தவும்.
நினைவிழந்த நிலையில் அல்லது அரைகுறை நினைவு நிலையில் இருக்கும் நோயாளிக்கு தண்ணீர் அல்லது சோடா போன்ற திரவப்பொருள் கொடுக்காதீர்கள். இதனால் தண்ணீர் மூச்சுக்குழாய்க்குள் சென்று மூச்சுத் திணறல் ஏற்படுத்தி விடும். நினைவிழந்த நிலையில் இருப்பவரை அறைந்து குலுக்கி நினைவு கொண்டுவர முயலாதீர்கள் .ஆபத்து.
மாரடைப்பு வரும்போது செய்ய வேண்டிய முதலுதவி என்ன?
1.நோயாளியின் இறுக்கமான உடைகளைத் தளர்த்தி அவரை படுக்க வைத்திருக்க வேண்டும்.
2.ஆக்ஸிஜன் சிலிண்டர் இருந்தால் நோயாளிக்கு கட்டாயம் செயற்கை சுவாசம் கொடுக்க வேண்டும்
3.நைட்ரோக்ளிசிரைன் அல்லது ஸார்பிட்ரேட் மாத்திரைகள் ஒன்றிரண்டு மாத்திரைகளை நோயாளியின் நாக்கின் அடியில் வைக்கவேண்டும்.
4.நீரில் கரைக்கப்பட்ட நிலையில் அஸ்பிரின் மாத்திரையைக் கொடுக்கலாம்
5.இந்த சிகிச்சையுடன் சிறந்த மருத்துவரின் சிகிச்சைக்கு நோயாளியை உட்படுத்தல் வேண்டும்.
மாரடைப்பிற்கு உரிய முறையில் சிகிச்சை அளித்தால் உயிரிழப்பைத் தவிர்கலாம்.
1.நோயாளியின் இறுக்கமான உடைகளைத் தளர்த்தி அவரை படுக்க வைத்திருக்க வேண்டும்.
2.ஆக்ஸிஜன் சிலிண்டர் இருந்தால் நோயாளிக்கு கட்டாயம் செயற்கை சுவாசம் கொடுக்க வேண்டும்
3.நைட்ரோக்ளிசிரைன் அல்லது ஸார்பிட்ரேட் மாத்திரைகள் ஒன்றிரண்டு மாத்திரைகளை நோயாளியின் நாக்கின் அடியில் வைக்கவேண்டும்.
4.நீரில் கரைக்கப்பட்ட நிலையில் அஸ்பிரின் மாத்திரையைக் கொடுக்கலாம்
5.இந்த சிகிச்சையுடன் சிறந்த மருத்துவரின் சிகிச்சைக்கு நோயாளியை உட்படுத்தல் வேண்டும்.
மாரடைப்பிற்கு உரிய முறையில் சிகிச்சை அளித்தால் உயிரிழப்பைத் தவிர்கலாம்.
வெட்டுக்காயங்கள்:
காயத்தை சோப்பு மற்றும் தண்ணீரால் சுத்தமாக கழுவ வேண்டும். இரத்தம் வெளியேறிக் கொண்டிருந்தால் அழுத்தம் கொடுத்து இரத்தத்தை நிறுத்த வேண்டும். சுத்தமான பேண்டேஜ் துணியால் காயத்தை சுற்றிக் கட்ட வேண்டும். ஆழமான காயத்திற்கு உடனே மருத்துவரை அணுகவும்.
சிராய்ப்புகள் மற்றும் சிறுகாயங்கள்:
இளஞ் சூடான நீரில் சோப்பினால் காயத்தினை நன்கு கழுவவும்.இரத்தம் கசிந்தால் சுத்தமான துணியினால் காயத்தை கட்ட வேண்டும்.
மூச்சுத் திணறல்:
பாதிக்கப்பட்ட நபர் இருமினால் உடனடி ஆபத்தில்லை என்று கருதலாம். தொண்டையில் ஏதாவது பொருள் அடைத்திருந்தால் மூச்சுத்திணறினால் உடல் நீலநிறமாக மாறும். அவரால் பேச முடிகிறதா? மூச்சுவிட கஸ்டமாக இருக்குறதா? எனக்கேட்பது அவசியம். அவரால் பேசமுடியாத நிலையிலும் தலை அசைத்து பதிலுரைக்க முடியும். ஏனெனில் மாரடைப்பு ஏற்பட்டாலும் இதே அறிகுறிகள் இருக்கும், ஆனால் அவரால் பேச முடியும். உடனடியாக மருத்துவ மனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.
மயக்கம்:
தலை லேசாகி சுற்றுவது போலிருந்தால், சோர்வு, வாந்தி, தோல் வெளுத்துக் காணப்படுவது மயக்கம் வருவதற்கான அறிகுறி. இன்னிலையில் மயக்கம் வருவதை தவிர்க்க முன்புறமாக சாய வேண்டும். முழங்கால்களுக்கு நேராக கீழே தலையை சாய்த்துக் கொள்ள வேண்டும்.
இதயத்தை விடக்க் கீழே இருக்கும் போது மூளைக்கு அதிக இரத்தம் கிடைக்கிறது. அதையும் மீறி நினைவிழந்தால் தலைப்பகுதியை விட கால் பகுதி உயர்ந்திருக்கும் நிலையில் படுக்க வைக்கவும். உடைகளை தளர்த்தி ஈரத் துணிகளை முகம் மற்றும் கழுத்தில் போடவும். இதன் மூலம் சுய நினைவு திரும்பினால் உடனே மருத்துவரைப் பார்க்கவும்
வலிப்பு:
வலிப்பு ஏற்ப்பட்ட ஒருவருக்கு கை கால் விறைத்து வெட்டி வெட்டி இழுக்கும். உடல் நீலமானால் ஆபத்து. நாக்கில் எச்சில் பெருகும் நாக்கை கடித்துக் கொள்ளும் அபாயம் உண்டு. சுற்றியுள்ள ஆபத்தான எல்லாப் பொருட்களையும் அப்புறப் படுத்த வேண்டும். தலைக்கு தலையணை போன்று எதாவது வைக்கவும். பாதிக்கப் பட்டவருக்கு எந்த திரவங்களையும் கொடுக்கக்கூடாது. மூச்சிழந்தால் சுவாசக் குழாயில் தடையிருக்கிறதா எனப் பார்க்கவும். காற்றோட்டம் செய்யவும். பதற்றப் படாமல் இருக்கவும். முடிந்தவரை உடனே மருத்துவரிடம் கொண்டு செல்லவும்.
அதிக வெப்பப் பாதிப்பு:
அதிக வெப்பத் தாக்குதலுக்கு உள்ளானவரை உடனே குளிர்விக்கவும். தண்ணீரில் தூக்கிப் போடலாம். நனைந்த துணியால் போர்த்தி விடலாம். ஐஸ் கட்டி ஒத்தடம் கொடுக்கலாம். குளிர்ந்த இடத்தில் ஓய்வெடுக்கச் செய்யவும். எந்த மருந்தும் கொடுக்கக்கூடாது. மருத்துவரிடம் அழைத்துச் செல்லவும்.
விஷம் அருந்தியிருந்தால்:
மருத்துவரை அழைக்கவும். என்ன விஷம் என்பதை அறிந்து மருத்துவருக்கு தகவல் தெரிவித்தால் அதற்குரிய மாற்று மருந்து கொண்டுவர இயலும். மூச்சுக்காற்றின் நாற்றம் வைத்தும் சில விஷங்களை அடையாளம் காணலாம்.
மருத்தவர் ஆலோசனையின்றி எதுவும் சாப்பிட,குடிக்கக் கொடுக்காதீர்கள். மருத்துவர் ஆலோசனையின்றி வாந்தி எடுக்க வைக்காதீர்கள். பாதிக்கப்பட்டவர் தானாக வாந்தி எடுத்தால் சுவாசம் தடைபடாமல் பார்த்துக்கொள்ளவும்.
கார்பன் மோனாக்ஸைடு காரணம் பாதிக்கப்பட்டால் நோயாளிக்கு உடனே சுத்தமான காற்று கிடைக்கச் செய்யவும்.
கார்பன் மோனாக்ஸைடு காரணம் பாதிக்கப்பட்டால் நோயாளிக்கு உடனே சுத்தமான காற்று கிடைக்கச் செய்யவும்.
நெருப்புக் காயம்: நெருப்புக் காயம் பட்டவுடன் குளிர்ந்த நீரில் நனைக்கவும். தொற்று ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவும்.உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லவும். மிக ஆழமான நெருப்புக் காயங்களுக்கு குளிர்ந்த தண்ணீர் ஆபத்தாகிவிடும். அப்படி செய்தால் பாதிக்கப்பட்டவருக்கு அதிர்ச்சி உண்டாகும். அந்த நிலமைகளில் பாதிக்கப்பட்டவரின் எரிந்த உடைகளை மாற்ற முயலாதீகள். எரியும் பகுதியிலிருந்து , புகை மற்றும் வெப்பமான இடத்திலிருந்து அப்புறப் படுத்தி விடுங்கள். இதயத்துடிப்பு மற்றும் சுவாசம் இருக்கிறதா எனப் பாருங்கள். இல்லாவிட்டால் cardiopulmonary resuscitation(CPR) முறையில் இதயத்தை துடிக்க வைக்க முயற்சிக்கலாம். காயத்தை கிருமி நீக்கிய ஈரமான பேண்டேஜ் துணியால் மூடவும்.
அமிலம் பட்டால்: அமிலம் போன்ற ரசாயனப் பொருட்கள் பட்டால் அந்த இடத்தை பைப் தண்ணீரால் 20 நிமிடங்கள் கழுவி அதன் வீரியத்தைக் குறைக்கவும்.
மின்சாரத் தாக்குதல்: உடனே மின் இணைப்பைத் துண்டிக்கவும் .மின்சாரம் தாக்கியவரை மின் இணைப்பைத் துண்டிக்காமல் தொடாதீர்கள். எதாவது பிளாஸ்டிக் பொருளால் தட்டி விடலாம். மின்சாரம் இதயத்தை தாக்கி இதயத்துடிப்பை நிறுத்தக்கூடும். தேவைப்பட்டால் செயற்கை சுவாசம் கொடுக்கவும்.
பிராணிகள் கடித்தால்: பாம்பு ,நாய் ,பூனை, எலி ,அணில்,சிலந்தி போன்ற பிராணிகள் கடிப்பது சில வேளை மிக ஆபத்தாகிவிடும். பாம்பு கடித்தால் ஆழமான இரண்டு விஷப்பல் அடயாளம் இருந்தால் அது விஷப்பாம்பு. அல்லமல் சிறிய பற்கள் மட்டும் பதிந்திருந்தால் விஷமற்ற பாம்பாக இருக்கலாம்.
சாதாரண பாம்பு என்றால் காயத்தை சுத்தமாக கழுவி விட்டாலே போதுமானதாகும். விஷப்பாம்பு என்றால் உடனே மருத்துவ உதவி தேவை. கடி பட்டவர் பதற்றமடைவதோ ஓடுவதோ ஆபத்து.விஷம் இரத்தத்தில் கலந்து வேகமாக பரவி விடும். கடிபட்ட இடத்தை தாழ்வாக வைத்திருக்க வேண்டும்.
கடிபட்ட இடத்தை சோப்பிட்டு நன்றாக கழுவவும்.முதலுதவி செய்பவர் கடிபட்ட இடத்தை கீறவோ,வாய் வைத்து இரத்தம் உறிஞ்சவோ செய்ய வேண்டாம். சீக்கரம் மருத்துவ மனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.
மற்ற மிருகங்கள் கடித்தால் காயத்தை சோப்பிட்டு கழுவி Antibiotic Ointment இட்டு சுத்தமான துணியால் கட்டவும். வெறிநாய் கடித்தால் Rabbis எனும் வைரஸ் தாக்கலாம். எலியால் plague வரலாம். எலி சிறுநீர் பட்ட தண்ணீர் அருந்தினால் எலிக் காய்ச்சல் வரலாம். மனிதன் கடித்தாலும் பெரும் பாக்டீரியதொற்று ஏற்படலாம்.
குழந்தைகள் பாதுகாப்பு: குழந்தையின் கண்களில் தூசு விழுந்தால் நீரால் அந்தப் பகுதியைத் துடைத்து விடலாம். கண்ணில் ஏதாவது சிறு பொருள் தென்பட்டால் ஒரு சுத்தமான துண்டு துணியின் முனையால் அதை எடுக்கலாம். ஆனால் ஒருபோதும் குழந்தை கண்களை கசக்கி விடக்கூடாது.
காதுகளில் ஏதாவது பொருள் சென்றுவிட்டால் அதை எடுக்க முயல . உடனே மருத்துவரிடம் செல்லவும். சிறு பூச்சியாக இருந்தால் காதுக்குள் வெது வெதுப்பான தண்ணீரை சிறிது ஊற்றலாம். பூச்சி மேலே வந்து மிதக்கும். எடுத்து விடலாம்.
குழந்தையின் மூக்கிலிருந்து ஏதோ ஒரு திரவம் வடிந்து கொண்டிருக்க, அது விடாமல் அழவும் செய்தால் எதையோ மூக்கிற்குள் அது செலுத்திக் கொண்டுவிட்டது என்று யூகிக்கலாம். பாதிக்கப்படாத மூக்கின் பாதியை நீங்கள் விரலால் அழுத்திக் கொண்டு மற்றொரு பாதியின் மூலம் வேகமாக வெளியே மூச்சை விடச் சொல்லலாம்.
இதன்மூலம் அந்தப் பொருள் வெளியே வரவில்லையென்றால் டாக்டரிடம்தான் போயாகவேண்டும்.
குழந்தைகள் காசு போன்ற சிறு பொருட்கள் எதையாவது வாய்க்குள் போட்டுக்கொண்டால் நிறைய பிரெட் அல்லது வாழைப் பழம் கொடுங்கள் .
குழந்தைகள் காசு போன்ற சிறு பொருட்கள் எதையாவது வாய்க்குள் போட்டுக்கொண்டால் நிறைய பிரெட் அல்லது வாழைப் பழம் கொடுங்கள் .
பெரும்பாலும் இவை ஜீரணப்பாதை வழியாக வெளிவந்துவிடும். ஆனால் உணவுக் குழாயிலோ, காற்றுக் குழாயிலோ சிக்கிக் கொண்டு பெரும் அவஸ்தை கொடுத்தாலோ, உள்ளே விழுங்கிய பொருள் கூர்மையான முனைகள் உடையது என்றாலோ உடனே மருத்துவரிடம் கொண்டு செல்லுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக