Pages

சனி, டிசம்பர் 27, 2014

அமெரிக்க வாழ் இந்திய மாணவர்களுக்கு அமெரிக்காவின் உயரிய இளம் விஞ்ஞானி விருது


வாஷிங்டன்: அமெரிக்காவில் வாழ்ந்து வரும் இந்தியருக்கு அமெரிக்காவின் இளம் விஞ்ஞானி விருது வழங்கப்பட்டுள்ளது.உலகம் முழுவதும் உள்ள மக்கள் மின்சாரத்தை சார்ந்துள்ள நிலையில்மின் பொருட்கள் உபயோகத்தால் ஏற்படும் காற்று தூய்மைக்கேட்டை கருத்தில் கொண்டுசகீல் தோஷி என்ற இந்திய மாணவர் மின் பாதுகாப்பு சாதனத்தை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவின் ஃபிட்ஸ்பர்க் பகுதியில் குடியேறியிருக்கும் அவருக்கு அமெரிக்காவின் உயரிய இளம் விஞ்ஞானி என்ற புத்தாக்க விருதையும் 25 ஆயிரம் அமெரிக்க டாலரையும் அமெரிக்காவின் டிஸ்கவரி எஜூகேஷன் என்ற அமைப்பு வழங்கி கவுரவித்துள்ளது. இந்த விருதுக்கான இறுதிச்சுற்றில் மொத்தம் பேர் போட்டியிட்ட நிலையில்சகீல் தோசிக்கு இந்த விருது வழங்கப்பட்டது. 
மேலும்அமெரிக்காவின் வெர்ஜீனியா பகுதியை சேர்ந்த இந்திய மாணவர் ஜெயகுமார் என்பவருக்கு காற்று தூய்மைக்கேட்டை தடுப்பதற்காக ஜன்னலில் பொருத்தப்படும் சிறப்பு கருவியை கண்டறிந்தார்.  இதற்காக அவர் 3வது இடத்தை பெற்றுள்ளார்.

கருத்துகள் இல்லை: