சென்னையில் 3 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரயில் : அக்டோபரில் வருகிறது !!
சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. சுமார் 45 கிமீ ற்கு இந்த சேவையை தர இருக்கிறார்கள். முதல் கட்டமாக கோயம்பேடு ஆலந்துர் இடையே 10 கிமீ தூரத்திற்கு இதனை அறிமுக படுத்துகிறார்கள். இது அக்டோபர் இறுதியில் வர இருக்கிறது. இதற்கான தண்டவாளங்கள் அமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. கூட்ட நெரிசல் நேரத்தில் மூன்று நிமிடத்திற்கு ஒரு ரயில் இயக்க திட்டமிட்டு உள்ளதால் , அதன் தண்டவாளங்கள் தரமானவையாக இருக்க வேண்டும். இதனை செய்யும் பணி பிரேசிலில் நடைபெற்று வருகிறது. இவை 1.435 இடைவேளி கொண்ட தண்டவாளங்கள்.
ஒரு மீட்டர் தூரத்திற்கான தணடவாளத்தின் எடை 52 கிலோ இருக்கும் ,ஆனால் இவை 60 கிலோ ஆகும். இரட்டை பாதையில் 230 கிமீ நீளத்திற்கு தண்டவாளங்கள் அமைக்கபட உள்ளது .60 கிமீ நீளத்திற்கு தேவையான தண்டவாளங்கள் வந்து விட்டது.மற்றதை விட இதன் விலை 20 சதவீதம் அதிகம் ஆகும் , ஆயுள் காலமும் இரு மடங்கு அதிகம் ஆகும்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக