இன்றைய இடுகையில் பென்டிரைவ் வைரஸ் தாக்கத்திற்கு அதிகம் உள்ளாகிறது அல்லவா? இதற்கு தீர்வு தரும் ஒரு சில மென்பொருள் இருக்கின்றன. அவைகளைப் பற்றிப் பார்ப்போம். அதற்கு முன்பு ஒரு சில பென்டிரைவ்களை Format செய்ய முயலும்போது அவற்றை பார்மேட் செய்ய முடியாது. பார்மேட் செய்யவியலாத பென்டிரைவ்களை பார்மேட் செய்யும் ஒரு எளிய வழிமுறையைப் பார்ப்போம். எல்லோருக்கும் தெரிந்த வழிமுறை பென்டிரைவ் device icon மீது ரைட் கிளிக் செய்து Format என்பதை கிளி32
0க் செய்வது. இவ்வாறான வழியில் பார்மட் செய்ய முடியவில்லை எனில் ்கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றலாம்.
பென்டிரைவ் பார்மட் செய்ய(Easy way to Format pen drive)
- உங்கள் கணினியில் Start==>Run==>கிளிக் செய்யுங்கள்.
- தோன்றும் விண்டோவில் cmd எனத் தட்டச்சிட்டு command prompt விண்டோவை திறக்கச் செய்யுங்கள்.
- prompt விண்டோவில் format/x G: என தட்டச்சிடவும். இதில் G என்பது உங்கள் பென்டிரைவைக் குறிக்கும் எழுத்தாகும். உங்கள் பென்டிரைவ்வை குறிக்கும் எழுத்து எதுவோ அதை குறிப்பிடவும். இப்போது இயக்கத்திற்கு தயார் Ready என தகவல் காட்டும்.
- இப்போது Enter கொடுங்கள்.
- இப்போது பங்கீடு நடக்கும். மீண்டும் Enter கொடுங்கள்.
- அவ்வளவுதான்..இப்போது உங்கள் பென்டிரைவ் பார்மேட் செய்யப்பட்டுவிடும்.
மற்றொரு முறையும் இருக்கிறது. இதற்கு ஒரு சிறிய மென்பொருளை தரவிறக்கிப் பயன்படுத்த வேண்டும். மென்பொருளின் பெயர் unlocker என்பதாகும். இந்த மென்பொருளைத் தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள். பிறகு mycomputer திறந்து அதில் உங்கள் பென்டிரைவ் incon
(G:) மீது ரைட் கிளிக் செய்து தோன்றும் மெனுவில் Unlocker என்பது தோன்றும். இதை கிளிக் செய்து லாக் செய்யப்பட்ட கோப்புகளை அழித்துவிடலாம். பிறகு உங்கள் பென்டிரைவை எளிதாக பார்மட் செய்து விடலாம்.
USB Gaurdian என்ற இந்த மென்பொருள் பயப்படுத்த எளிமையானது. இதைப் பயன்படுத்துவதன் மூலம் பென்டிரைவில் கோப்புகளை பாதுகாப்பாக சேமித்து வைத்துக்கொள்ள முடியும். இம்மென்பொருளின் மூலம் முக்கியமான கோப்புகளை பூட்டி(lock) வைத்துகொள்ளும் வசதியும் உள்ளது.
மென்பொருளை DOWNLOAD செய்ய
Panda USB Vaccination Tool - பாண்டா யு.எஸ்.பி. வேக்சினேஷன் என்ற இம்மென்பொருள் பாண்டா நிறுவனத்தின் தயாரிப்பு ஆகும். இம்மென்பொருளை கணினியில் நிறுவினால் பென்டிரைவினில் இருக்கிற autorun.inf என்ற கோப்பை இயங்காதவாறு தடை செய்கிறது. இதனால் கணனியில் பென்டிரைவை இணைக்கும்போது தானாக இயங்கும் வசதி தடைசெய்யப்படுகிறது. இதன் மூலம் கணினியில் வைரஸ் பரவுவது தடுக்கப்படுகிறது.
மென்பொருளை DOWNLOAD செய்ய
USB Write Protector என்ற இந்த மென்பொருளைப் பயன்படுத்தியும் பென்டிரைவை பாதுகாக்க முடியும். இதில் உங்கள் பென்டிரைவில் உள்ள கோப்புகளை மற்றவர்கள் படிக்க மட்டுமே முடியும். மற்றவர்களால் பென்டிரைவில் இருக்கும் கோப்புகளைப் பயன்படுத்த முடியாது. அதாவது கோப்புகளை எடிட் செய்யவோ, திருத்தம் செய்யவோ முடியாது.
இம்மென்பொருளை Download செய்ய:
USB Firewall என்ற இம்மென்பொருள் பயன்படுத்துவதன் மூலம் பென்டிரைவிலிருந்து வைரஸ் கணினிக்கு பரவுவது தடுக்கப்படுகிறது.
இமென்பொருளை டவுன்லோட் செய்ய..
Autorun Virus Remover 3.1 என்ற இம்மென்பொருள் பென்டிரைவ் மூலம் வைரஸ் வருவதை தடுக்கிறது. உங்கள் பென்டிரைவை கணினியில் இணைத்தவுடனேயே இம்மென்பொருள் தானாகவே அதை Scan செய்கிறது. autorun.inf virus, trojans, மற்றும் worms போன்ற தீங்கிழைக்கும் நச்சுநிரல்கள் இருந்தால் உடனே அவற்றை நீக்கிவிடுகிறது.
இம்மென்பொருளை Download செய்ய
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக