கூகிள் வழங்கும் இலவச வெப்சைட்
முதலீட்டாளர்களுக்கு கூகிள் இலவச வெப்சைட் வழங்குகிறது. தொழில்நுட்ப அறிவோ, பணமோ தேவையில்லை. முற்றிலும் இலவசமாக ஹோஸ்டிங் மற்றும் டொமைன் வழங்குகிறது. கிட்டத்தட்ட 15 நிமிடங்களில் நமக்கு ஒரு
வெப்சைட் கிடைத்துவிடும்.
இந்தியாவில் கிட்டத்தட்ட 8 மில்லியன்
சிறு தொழில் முதலீட்டாளர்கள் உள்ளதாகவும் அவர்களில் சுமார் 5% மட்டுமே
இணையத்தை உபயோகம் செய்வதாக குறிப்பிட்டுள்ள கூகிள் அதிகாரிகள்
3 வருட காலத்திற்குள் 5 லட்சம் பேருக்கு இலவச வெப்சைட் வழங்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
http://www.indiagetonline.in/
மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து அந்த தளத்திற்கு
சென்று பெயர்,முகவரி,PAN நம்பர் கொடுத்து ஆரம்பித்து கொள்ளலாம்.
கவனத்திற்கு:
1) ஒரு வருடம் மட்டுமே இந்த சலுகை. அதன் பிறகு Domain Name க்கு ஒரு
தொகையும், பராமரிப்பு கட்டணமாக மாதம் ஒரு தொகையும்
செலுத்த வேண்டி வரும்.
2) ஒரு வருடத்திற்குள்ளாகவோ, ஒரு வருடம் முடிந்தவுடனோ நமது தளத்தை
எப்பொழுது வேண்டுமானாலும் கேன்சல் செய்து கொள்ளலாம்.
3) நமது பெயருடன் .in சேர்ந்து வரும்.
இது வியாபார நோக்கத்திற்காக இல்லை என
கூகிள் அறிவித்தாலும், பெருவாரியான வணிகர்களை ஆன்லைன் பக்கம்
இழுப்பதற்கான முயற்சியாக தான் தெரிகிறது. இலவசம் என்பதாலும், கூகிள்
என்பதாலும் தைரியமாக வணிகர்கள் முயற்சித்துப் பார்க்கலாம். நாம் விரும்பும் பெயர் கிடைக்க வேண்டும் என்றால் உடனடியாக பதிவு செய்து கொள்ளுங்கள். வியாபாரத்திற்கு உபயோகம் ஆகும் பட்சத்தில் பணம் கொடுத்தும் தொடரலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக