நிறைய வீடுகளில் கொசுக்களை விரட்ட கெமிக்கல்கள் கலந்த கொசு விரட்டிகளை பயன்படுத்துகின்றனர் . அவ்வாறு அத்தகைய கொசு விரட்டிகளை பயன்படுத்துவதால் , சருமம் மற்றும் கண்களுக்கு மட்டும் பாதிப்பை ஏற்படுத்துவதோடு , நுரையீரலுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது . அத்தகைய கேடுகள் விளைவிக்கும் கெமிக்கல் கலந்த கொசு விரட்டிகளை பயன்படுத்துவதை விட , வீட்டில் இருக்கும் ஒரு சில பொருட்களை வைத்து கொசுக்களை விரட்டலாம் . இதனால் கொசுக்கள் அழிவதோடு , உடலும் ஆரோக்கியமாக இருக்கும் . அத்தகைய வீட்டு கொசு விரட்டிகள் என்னவென்று பார்ப்போமா !!! இயற்கை முறையில் கொசுக்களை விரட்ட ... தேங்காய் நார் : தேங்காய் உடலுக்கு மட்டும் நன்மை தராமல் , வீட்டில் பல செயல்களுக்கும் பயன்பட்டு நன்மை தருகிறது . எப்படியென்றால் தேங்காய் நார்கள் , வீட்டில் பாத்திரங்களை கழுவுவதற்கு பயன்படுவதோடு , வீட்டில் இருக்கும் கொசுக்களை விரட்டவும் பயன்படுகிறது . எவ்வாறென்றால் , இந்த காய்ந்த தேங்காய் நார்களை எரித்தால் , அதில் இருந்து வரும் புகை கொசுக்களை எளிதில் விரட்டிவிடும் . தற்போது தேங்காய் நார்கள் கூட கடைகளில் விற்கப்படுகிறது . ஆகவே அந்த நார்களை வாங்கி வந்து , மாலை நேரத்தில் நார்களை நெருப்பில் காட்டி , அனைத்து ரூம்களுக்கும் அந்த புகையை காண்பித்து , சிறிது நேரம் கழித்து பாருங்கள் , ஒரு கொசு கூட வீட்டில் இருக்காது . இந்த புகையால் உடலுக்கு பாதிப்பு வராதா ? என்று கேட்கலாம் . இயற்கை நார்களில் இருந்து ஏற்படுத்தும் புகையால் எந்த பாதிப்பும் ஏற்படாது . கற்பூரம் : கொசுக்கள் அழிவதற்கு முக்கியமான பொருள் , சல்பர் . இந்த சல்பர் எங்கு இருந்தாலும் , கொசுக்கள் வெளியில் தான் இருக்கும் . கற்பூரம் இந்த சல்பரினால் ஆனது . ஆனால் , ஒரு பிரச்சனை என்னவென்றால் , கற்பூரத்தை காற்றில் வைத்தால் , அது உடனே கரைந்துவிடும் . ஆகவே இந்த கற்பூரத்தை ஒரு தட்டில் வைத்து , எரித்து வீட்டைச் சுற்றி காண்பித்தால் , கொசுக்கள் அந்த வாசனைக்கு வராது . இல்லையென்றால் , ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு , அதில் கற்பூரத்தைப் போட்டு வைத்தால் , அதில் இருந்து வரும் வாசனைக்கு கொசுக்கள் வீட்டை எட்டிக் கூட பார்க்காது . கெரோசின் மற்றும் கற்பூரம் : இந்த இரண்டுமே மிகவும் சிறந்த , கொசுக்களை அழிக்க வல்ல பொருட்கள் ஆகும் . அதற்கு கொசுக்களை அழிக்க கடைகளில் விற்கும் மிசின்களில்(Liquid Bottle) உள்ள காலி டப்பாவில் , கெரோசினை விட்டு , அதில் சிறிது கற்பூரத்தை விட்டு , மின்சார பிளக்கில் மாட்டி விட வேண்டும் . இதனால் கொசுக்கள் வீட்டில் வராமல் இருப்பதோடு , உடல் ஆரோக்கியத்திற்கு எந்த கெடுதலும் ஏற்படாமல் இருக்கும் . |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக