Pages

புதன், ஜூன் 19, 2013

புறநானூற்றில் வரும் இழிபிறப்பாளன் யார் ?



புறநானூற்றில் வரும் இழிபிறப்பாளன் யார் ? 
வரலாற்றுக்கு முந்தைய தென்னிந்தியாவில்(தமிழகத்தில்) முதன்முதலாகப் பயன்படுத்தப்பட்ட முக்கியமான "மரம்" மூங்கில் எனலாம். பழைய கற்கால ஆயுதங்களில் முதன்மை வாய்ந்ததாக காம்போடு இணைக்கப்பட்ட கூரிய கல்லாயுதம் இருந்தது.
இந்தக் கற்காலக் கோடரியின் காம்பாக ஆரம்பத்தில் விலங்குகளின் எலும்புகள் பயன்படுத்தப் பட்டன. பிறகு எலும்பை ஒத்த மூங்கில் கழிகள் பயன்படுத்தப் பட்டன. மூங்கில்கழிக் காம்புகளை சிரமப்பட்டு உருவாக்கவேண்டியதில்லை. எலும்புகளைப் போல, கிடைக்கும் நிலையிலேயே பயன்படுத்தலாம்.
மலைசார்ந்த காட்டுப் பகுதிகளில் கோடரிக்கு அடுத்தபடியாக வேலும், வில்லும் மிக முக்கியமான ஆயுதங்கள் ஆயின. அவற்றுக்கும் மூங்கில் பயன்பட்டது. பழைய தமிழ் இலக்கியத்தில் மூங்கிலுக்கு மற்றொரு பெயர் "காம்பு" என்பது–
"காம்பு தலை மணந்த ஓங்கு மலைச் சாரல்" (அகநானூறு: 172).

கருத்துகள் இல்லை: