தெரிந்து கொள்வோம் வாங்க
* ஒரிசா மாநிலத்தில் யானை சந்தை உள்ளது.
* பைசா நகர சாய்வு கோபுரம் வட்ட வடிவிலானது. எட்டு அடுக்குகளைக் கொண்டது.
* பெண் நீர் யானைகளை விட, ஆண் நீர் யானைகள் அதிக எடை உடையவை.
* தகவல் தொழில்நுட்பத் துறையில் ஆண்டுதோறும் 660 டன்கள் தங்கம் பயன்படுத்தப்படுகிறது.
* 22 காரட் தங்கம் என்பது 91.67 சதவீதம் தூய்மையானது.
* சோழ மன்னர்களுக்குரிய பட்டப் பெயர்கள் கிள்ளி, செம்பியன், வளவன், சோழன், காவிரி நாடன், கண்டர் என்பதாகும்.
* பாண்டியருக்குரிய பட்டப் பெயர்கள் வழுதி, மாறன், பாண்டியன், பொருப்பின், செழியன்.
* சேரர்களுக்குரிய பட்டப் பெயர்கள் சேரன், வானவன், மலையன், பொறையன், உழியன்.
* ஆப்பிரிக்காவில் உள்ள யானைகளில் சில கறுப்பு நிறத் தந்தம் உடையனவாக இருக்கின்றன.
* கோழியின் உடலில் எட்டாயிரத்திற்கு மேற்பட்ட சிறகுகள் உள்ளன.
* சிங்கம் ஒரே பாய்ச்சலில் 24 அடி தூரம் பாயும்.
* மூங்கில் ஒரு நாளைக்கு 3 அடி உயரம் வளரும்.
* முந்திரிச் செடி 1660-ம் ஆண்டில் முதன்முதலில் இந்தியாவில் பயிரிடப்பட்டது. இச் செடி பிரேசில் நாட்டில் முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்டது.
* தங்கம் உலகம் முழுவதும் 60 நாடுகளில் வெட்டி எடுக்கப்படுகின்றன.
* இங்கிலாந்து நாட்டு மக்கள் 9 காரட் தங்க நகைகளே அணிகிறார்கள்.
* சுத்தமான தங்கம் 99.99 சதவீதம் தூய்மையானது.
* தங்கம் அதிகமாக விற்பனையாகும் நாடு
இந்தியா.
* அதிக அளவில் வெள்ளி எடுக்கப்படும் நாடு மெக்சிகோ ஆகும்.
* பிறந்த முயல் குட்டியின் எடை 49 முதல் 50 கிராம் வரை இருக்கும்.
நீர் யானைகள் இரண்டு வகைப்படும். ஒன்று சாதாரண நீர் யானை. இதன் எடை 3,600 கிலோவாகும். இன்னொன்று, சைபீரிய நீர்யானை. இவை அதிக பட்சம் 2,500 கிலோ எடை வரை இருக்கும்.
பெண் நீர் யானை 210 முதல் 255 நாட்களுக்குள் குட்டி போடுகிறது. ஒரு கூட்டத்தில் 20 முதல் 100 நீர்யானைகள் வரை இருக்கும்.
கனத்த எடை கொண்டது என்றாலும் நீர்யானைகள் ஓடுவதில் வல்லவை. அவை மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடக் கூடியவை. இவற்றின் ஒருவேளை உணவு 45 கிலோ புல் ஆகும்.
***
*மாடுகளைப் போல் நாய்களும் நிறக்குருடுகள் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் நாய்கள் நிறக் குருடுகள் அல்ல. அவற்றாலும் சில நிறங்களை அடையாளம் கண்டு கொள்ள இயலும். இப்படி நாய்கள் நிறத்தை அடையாளம் காண்பது நாய்க்கு நாய் வேறுபடும். இதனால்தான் நாய்கள் சில நேரம் அழுக்கு ஆடை அணிந்தவர்களைக் கண்டால் குரைக்கின்றன.
***
*பாம்புகளை விட மீன்களில்தான் அதிக விஷம் கொண்டவை இருக்கின்றன. உலகில் மொத்தம் 1,200 வகையான விஷ மீன்கள் இருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் மீன்கடியால் 50 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்படுகிறார்கள். ஆனால் கடந்த சில ஆண்டுகள் வரை 300-க்கும் சற்று குறைவான மீன்கள்தான் விஷத் தன்மை கொண்டவை என்று கூறப்பட்டு வந்தது.
***
*யானை மணிக்கு 24 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும். அப்படி ஓடும்போது அதன் ஏதாவது ஒரு காலோ இரண்டு கால்களோ தரையில் இருக்கும்படிதான் அது ஓடும். இல்லாவிட்டால் யானையால் ஓட முடியாது.
***
*வண்ணத்துப் பூச்சியின் கூட்டுப் புழுக்கள் இலைகளை மட்டுமே தின்னுகின்றன என்று நினைத்தால் தவறு. இவை பட்டுப்போன்ற மென்மையான வலையையும் பின்னுகின்றன. இதில் சிக்கிக் கொள்ளும் நத்தையைக் கூட இவை தின்று விடுகின்றன.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக