Pages

வியாழன், ஏப்ரல் 25, 2013

வானவியல்


வானவியல் - சந்திரன்


அமாவாசையன்று
 அதிகாலை கிழக்குத் திசையில் வழக்கம்போல் சூரிய உதயத்தைக் காணலாம்.அமாவாசையன்று கிழக்குத் திசையில் சூரியன் மட்டுமன்றி சூரியனுடன் சேர்ந்து சந்திரனும்உதிக்கிறதுமாலையில் சூரியனுடன் சேர்ந்து அஸ்தமனமாகி விடுகிறது.
undefined




ஆனால் சூரியனின் பிரகாசம் காரணமாக சூரியனுடன் சேர்ந்து உதிக்கிற சந்திரனை நம்மால்காணமுடியவில்லைஉங்கள் கண்களுக்கு அபூர்வ சக்தி இருந்து ஒரு வேளை சந்திரன் - சூரியனின்அருகே - தெரிந்தாலும் அது ஒளியற்றதாக அருவம் போல மங்கலாகத்தான் தெரியும்.
உதாரணமாக மே 31, 2003 அமாவாசைஅன்று சூரிய உதய நேரம் காலை 5-41. சந்திரனின் உதய நேரம்காலை 5-36.
அமாவாசை கழிந்த மறுநாள் சந்திரன் சற்று தாமதமாக உதிக்கும்அதற்கு மறுநாள் மேலும் தாமதமாகஉதிக்கும்இப்படியே சென்று 14 நாட்களுக்குப் பிறகு சந்திரன்சூரியன் உதித்து சுமார் 12 மணி நேரம்கழித்து - அதாவது மாலையில்கிழக்குத் திசையில் - உதிக்கும்அப்போது அது முழு நிலவாகத்தெரியும் (பெளர்ணமி).

கருத்துகள் இல்லை: