Pages

செவ்வாய், ஏப்ரல் 16, 2013

உலக மொழிகளை கற்றுக் கொள்பவர்களுக்கும் அதில் ஆர்வமுள்ளவர்களுக்கும் உதவ வந்திருக்கிறது ஒரு மென்பொருள்

நமது செல்போனில் நம்மால் இப்போது எத்தனை மொழிகளில் டைப் செய்ய இயலும்? ஆங்கிலம், தமிழ் உறுதி. ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் ஓக்கே. இதோவந்துவிட்டது, 150 மொழிகளில் டைப் செய்ய உதவும் ஆண்ட்ராய்டு மென்பொருள் ஒன்று. –MULTILING KEYBOARD என்ற இந்த மென்பொருளைக்கொண்டு நமது உள்ளூர் மற்றும் தேசிய மொழிகள் மட்டுமல்ல, பிரெஞ்ச், ஸ்பானிஷ், இத்தாலியன், ரஷ்யன், கிரேக்க மொழிகளிலிருந்து, நாம் ஒன்றும் புரியாமல் பயத்துடன் பார்க்கும் கட்டிடங்களைப் போன்ற சீன மொழி வரை உலகின் பல மொழிகளில் நம்மால் இதில் டைப் செய்ய முடியும்.

இந்த மென்பொருளை ஆண்ட்ராய்டு வசதி உள்ள மொபைலில் தரவிறக்கம் செய்து நிறுவிக்கொண்டால் நமக்குத் தேவையான மொழிகளை மட்டும் ACTIVATE செய்துகொள்ளலாம். பின்னர் அந்த மொழிகளிலேயே குறுஞ்செய்தி அனுப்ப, முகநூலில் நிலைத்தகவல் பதிவேற்றம் செய்ய, ட்விட்டரில் ட்வீட்ட என எல்லாம் செய்யலாம். எழுத்துக்கள் யூனிகோடு எழுத்துருவில் இருப்பதால், ஆண்ட்ராய்டு அலைபேசியில் இருந்து மற்ற அலைபேசிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பினாலும் படிக்க முடியும்.

இது தமிழில் மட்டுமல்ல, நமக்குத் தெரிந்த மொழிகள் அனைத்திலும் எழுதிட உதவுவதோடு,தெரியாத மொழிகளிலும்கூட எழுத முடியும் என்பது கூடுதல் சிறப்பம்சம். இந்த மென்பொருளைப் பயன்படுத்தும்போது,DICTIONARY MODE – 1 ACTIVATE செய்துவிட்டால் அந்த மொழிகளின் வார்த்தைகளை அறிந்துகொண்டு எழுத முடியும். செல்பேசி மூலம் இணையத்தைப் பயன்படுத்துவோருக்கு இந்த மென்பொருள் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்.

உலகில் பேச்சுவழக்கில் இல்லாத, பழைய புத்தகங்களில் மட்டும் உள்ள சமஸ்கிருதம், பாரசீகம், லத்தீன், ஹீப்ரு போன்ற அரிதான மொழிகளில்கூட நம்மால் இதில் எழுத முடியும். இந்த மென்பொருளைப் பற்றி அறிந்துகொள்ள https://play.google.com/store/apps/details?id=com.klye.ime.latin என்ற லிங்க்கைப் பாருங்கள்.ஆண்ட்ராய்ட்டின் GOOGLE PLAYSTORE ல் இருந்து இந்த மென்பொருளை இலவசமாக தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.

இந்தப் பயனுள்ள மென்பொருளை ஹான்ஸோ என்ற இணையதள நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ளது. இதுவரை பத்து லட்சத்திற்கும் மேற்பட்டோரால் இது தரவிறக்கம் செய்யப்பட்டு, பலருக்கும் பயன்பட்டு வருகிறது இந்த மென்பொருள். உலகமொழிகளைக் கற்றுக்கொள்பவர்களுக்கும் பல மொழிகளில் ஆர்வம் உள்ளவர்களுக்கும் இந்த மென்பொருள் நிச்சயம் நிறையவே கற்றுக்கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

கருத்துகள் இல்லை: