Pages

வெள்ளி, மார்ச் 01, 2013

பொருள் விபரப்பட்டி​யலை(Invoice) ஒன்லைனில் உருவாக்கிக் ​கொள்வதற்கு


 வியாபார நடவடிக்கைகளின் போது இடம் பெறும் கொடுக்கல்- வாங்கல்கள் தொடர்பான விபரங்களை பதிவு செய்வதற்கு பல கணனி மென்பொருட்கள் காணப்படுகின்றன.இவை தவிர ஒன்லைன் மூலம் பதிவுகளை மேற்கொள்ளக்கூடிய வசதிகள் காணப்பட்ட போதிலும், அவற்றுள் தரம் குறைவான சேவைகள், நம்பகத்தன்மையற்ற தன்மை போன்றவற்றுடன் பணம் செலுத்த வேண்டிய நிலையும் காணப்படும்.
எனினும் 100 வீதம் இலவசமானதும், சிறந்த சேவையினை வழங்கக்கூடியதுமாக Robo invoice எனும் தளம் காணப்படுகின்றது.
இதன் மூலம் மேற்கொள்ளப்படும் பதிவுகளை தரவிறக்கம் செய்யக் கூடியதாகக் காணப்படுவதோடு, பிரிண்ட் செய்யும் வசதியையும் கொண்டுள்ளது.
அத்துடன் குறித்த வியாபார நிறுவனத்தின் லோகேவை தரவேற்றம் செய்து இணைக்கக்கூடியதாகவும் காணப்படுகின்றது.
மேலும் இச்சேவையினைப் பெற்றுக் கொள்வதற்கு எந்தவிதமான முற்பதிவுகளும் மேற்கொள்ள வேண்டிய அவசிம் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: