Pages

செவ்வாய், மார்ச் 05, 2013

மருத்துவம் சேவைக்கான உயர்ந்த இடம்



மருத்துவம் சேவைக்கான உயர்ந்த இடம் – வியாபார இடம் அல்ல – விழிப்புணர்வு

05 Photo
கடவுளுக்கு அடுத்ததாக நாம் நினைக்கும் ஒருவர் தான் மருத்துவர், ஆதி காலத்தில் மருத்துவம் என்பது சேவைக்கான ஒரு இடமாகத்தான் இருந்தது. அரசனுக்கு வைத்தியம் செய்யும் அரச வைத்தியர் தான் வசதியில்லாத ஏழைக்கும் வைத்தியம் செய்வார், இப்படிப்பட்ட வைத்தியர்களுக்கு காசு , பணம் என்பது ஒரு போதும் பொருட்டல்ல. எந்த நேரமும் நோய்களை நீக்குவதிலே கருத்தாக இருந்துள்ளனர். மருந்து சாப்பிட்டு குணம் கிடைத்தவர் கொடுக்கும் பொருளை வாங்கிக்கொள்வரே தவிர ஒரு போதும் இவ்வளவு பணம் கொடுங்கள் என்று கேட்டதே கிடையாது, இன்னும் இது போல் ஒரு சில வைத்தியர்கள் கிராமங்களிலும் மலைகளிலும் முகம் தெரியாமல் வசிக்கின்றனர். சேவைக்கான மருத்துவமனை இக்காலத்தில் எப்படி எல்லாம் இருக்கிறது என்பதை இந்த வீடியோவைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
நன்றி விஜய் டிவி.
வெளிநாட்டில் வசிக்கும் நம் வலைப்பூ வாசகர் ஒருவருக்கு  இருந்த ஒரு மிகப்பெரிய பிரச்சினைக்கு எளிதாக 44 நாட்களில் முழுமையான குணம் கிடைத்தது. வருங்கால சிகிச்சை முறைகளை ஆராய்ச்சி செய்யும் அந்த வெளிநாட்டு மருத்துவர்களே நேரடியாக நம் வலைப்பூவைத் தொடர்பு கொண்டு சித்த மருத்துவத்தைப்பற்றியும் இந்த மருத்துவ முறைகளைப்பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமாக இருப்பதாக தெரிவித்தும். குருவின் அனுமதி இல்லாத காரணத்தினால் இன்று வரை காத்திருக்கின்றனர். நம் தாய் மருத்துவமான சித்த மருத்துவத்தைப்போற்றுவோம். முடிந்த வரை பக்கவிளைவுகள் ஏற்படுத்தாத பாசானங்கள் இல்லாத இயற்கையில் கிடைக்கும் அரிய மூலிகைகளைக்கொண்டு நோய்களை குணப்படுத்துவோம். கொல்லிமலை , சதுரகிரி மலை அருகில் இருக்கும் நபர்கள், மூலிகை பறித்து கொடுப்பவர்கள் தங்களுக்கு தெரிந்தவர்கள் இருந்தால் தெரியப்படுத்தவும். முடிந்தவரை பல மூலிகைகளை வளர்த்து நம் தமிழ் சமூகத்திற்கு உதவுவோம். சித்த மருத்துவத்திற்கு மிகப்பெரிய எதிர்காலம் இருக்கிறது என்பதை அனைவருக்கும் புரிய வைப்போம் மக்களிடம் இந்த செய்தியை கொண்டு செல்வோம்.

மேற்கொண்டு தகவல்களைப் பெற..

கருத்துகள் இல்லை: