Pages

வெள்ளி, மார்ச் 01, 2013

ஆத்திரேலியாவில் 4,000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியர் குடியேற்றம்


ஆத்திரேலியாவில் 4,000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியர் குடியேற்றம், ஆய்வுகள் தெரிவிப்பு

விக்கிசெய்தியில் இருந்து
    

4,000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியர்களின் குடியேற்றம் ஆத்திரேலியாவில் இடம்பெற்றுள்ளதை மரபணு ஆய்வுகள் தெரிவித்துள்ளன.



ஆத்திரேலியப் பழங்குடிகள்
40,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆத்திரேலியக் கண்டத்தில் மனிதக் குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்டது முதல் 1800களில் ஐரோப்பியர்களின் வருகை வரை ஆத்திரேலியா உலகில் தனித்திருந்த பிரதேசம் என நம்பப்பட்டு வந்தது. ஆனால், ஆத்திரேலியப் பழங்குடியினரின் மரபணுச் சோதனைகள் மூலம், இவ்விடைப்பட்ட காலப்பகுதியில் இந்தியர்களின் வருகை அதிகமாக இருந்தது தெரிய வந்துள்ளது.

ஆத்திரேலியாவில் டிங்கோ நாய்களை இந்தியர்களே அறிமுகப்படுத்தினர் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அறிவியலுக்கான தேசியக் கழகத்தின் செயலமர்வுகளில் இது குறித்த ஆய்வுகள் வெளியிடப்பட்டன. இந்தியர்கள் தம்முடன் நுண்கற்கள் எனப்படும் கல்லாயுதங்களையும் தம்முடன் கொண்டு வந்ததாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மேலும்: விக்கிசெய்திகளில்: http://ta.wikinews.org/s/5jr

கருத்துகள் இல்லை: