Pages

திங்கள், அக்டோபர் 01, 2012

Google இன் Web fonts வசதி பற்றி உங்களுக்கு தெரியுமா?

Google இன் Web fonts வசதி பற்றி உங்களுக்கு தெரியுமா?



கூகுள் இணையத்தளம் பல புதிய சேவைகளை அறிமுகப்படுத்தியவாறே உள்ளது. அந்த வகையில் Web Fonts என்ற ஒரு சேவையினை வழங்கி உள்ளது.
இதில் சுமார் 500க்கும் அதிகமான புதுவகையான எழுத்துருக்கள் காணப்படுகின்றன.
எப்படி பெறுவது?
முதலில் கூகுளின் Web fonts தளத்தை ஓபன் செய்து கொள்ளவும். அதில் கூகுளின் அனைத்து எழுத்துருக்களும் இருக்கும்.
அதில் ஒவ்வொரு எழுத்துருக்களின் அருகிலும் Add to Collection என்ற நீல நிற பட்டன் இருக்கும், அதன் மீது கிளிக் செய்யவும்.
இதே முறையில் உங்களுக்கு பிடித்த அனைத்து எழுத்துருக்களையும் தெரிவு செய்து கொள்ளவும்.
உங்களுக்கு தேவையான அனைத்து எழுத்துருக்களையும் தெரிவு செய்த பின்னர், மேலே வலது புறத்தில் உள்ள Download your Collection என்ற லிங்கை கிளிக் செய்யவும்.
அதன் பின் தோன்றும் விண்டோவில் download font families என்பதில் கிளிக் செய்யவும்.
நீங்கள் தெரிவு செய்த அனைத்து எழுத்துருக்களும் .zip வடிவில் உங்கள் கணனியில் சேமிக்கப்படும். நீங்கள் அதனை extract செய்து குறிப்பிட்ட பான்ட் பைலை(.ttf) கொப்பி செய்து C:WindowsFonts என்ற இடத்தில் பேஸ்ட் செய்து விடவும். அவ்வளவு தான் அந்த எழுத்துரு உங்கள் கணனியில் சேர்ந்து விடும்.

பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்....

கருத்துகள் இல்லை: