Pages

சனி, செப்டம்பர் 29, 2012

பாஸ்போர்ட் சேவைக்கட்டணம் உயர்வு

பாஸ்போர்ட் சேவைக்கட்டணம் உயர்வு
பாஸ்போர்ட் சேவைக்கட்டணம் உயர்வு

பாஸ்போர்ட் சேவைக்கான கட்டணம் வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் உயர்கிறது. பாஸ்போர்ட் மற்றும் பாஸ்போர்ட் தொடர்புடைய சேவைகளுக்கான கட்டணத்தை 1000 ரூபாயிலிருந்து, 1500 ரூபாயாக உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. அதேபோல் தட்கால் திட்டத்தில் பாஸ்போர்ட் பெறுவதற்கான கட்டணம் ரூ.2500-லிருந்து, ரூ.3000 ஆக உயர்த்தி வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று உத்தரவிட்டது.
வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கு பாஸ்போர்ட் சேவைக் கட்டணம் 40-லிருந்து, 75 அமெரிக்க டாலர்களாகவும், 48-லிருந்து 65 யூரோவாகவும் உயர்கிறது. பாஸ்போர்ட் தொடர்புடைய சேவைகளுக்கான கட்டணம், கடைசியாக கடந்த 2002-ம் ஆண்டு மார்ச் மாதம் மாற்றியமைக்கப்பட்டது.
மூலதன செலவு, உபகரணங்கள் கொள்முதல் செலவு, போலீஸ் அதிகாரிகளுக்கு பணம் திருப்பி செலுத்துதல், பாஸ்போர்ட் புத்தகம் அச்சிடும் செலவு, அஞ்சலக செலவு, சேவை ஒப்பந்த கட்டணம் உள்ளிட்டவற்றில் ஏற்பட்ட உயர்வு காரணமாக பாஸ்போர்ட் சேவைக் கட்டணம் தவிர்க்க இயலாததாகி விட்டது என வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் கூறியுள்ளது.

கருத்துகள் இல்லை: