Pages

சனி, ஆகஸ்ட் 04, 2012

உலக நண்பர்கள் தினம்

உலக நண்பர்கள் தினம்

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதத்தின் முதல் ஞாயிற்றுக் கிழமை, நண்பர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தாயன்புக்குப் பிறகு உலகில் உள்ள எல்லா உறவுகளை விடவும் நட்பு தான் உயர்ந்ததாக மதிக்கப்பட்டு வருகிறது. உலகில் உண்மையான நட்புக்கு ஈடு, இணை எதுவும் கிடையாது. இக்காலத்திலும் நட்பினை கவுரவப்படுத்துவதில் பலரும் ஆர்வம் கொண்டிருக்கிறார்கள்இத்தகைய நட்பினை பாராட்டுவதற்காக உலகம் முழுவதும் நண்பர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. கால போக்கில் தங்களை விட்டு பிரிந்து சென்று வேறு எங்கேயோ வாழ்ந்து கொண்டிருக்கும் நண்பர்களையும் நினைவு கூறும் தினமாகவும் இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டில், உலகம் முழுவதும் இன்று நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

அந்த நாள் ஞாபகம்
உலகில் சின்ன தீவுகளில் வசிப்பவர்களும் சாதி, மத பாகுபாடு இன்றி அன்பின் அடையாளமாக நண்பர்கள் தினத்தை கொண்டாடி வருகின்றனர். வயதானாலும் நட்புக்கு என்றும் வயது இல்லை என்று கூறி அந்த நாள் பழகிய நண்பர்களை இந்நாளில் தொடர்பு கொண்டு, அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனேஎன்று ஆட்டம் போடும் நாளாகவும் இந்த நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.
ஏற்கனவே உயிருக்கு உயிராக நண்பர்களாக பழகி வருபவர்கள் கூட தங்கள் நட்பை பலப்படுத்திக்கொள்ள, தங்கள் அன்பை வெளிப்படுத்த நண்பர்கள் கையில் நட்பு கயிற்றை (பிரண்ட்ஷிப் பேண்ட்) கட்டி தங்கள் மகிழ்ச்சியை தெரிவிப்பார்கள்.
எஸ்.எம்.எஸ். மூலம்
மேலும் அவர்கள் நண்பர்கள் தினத்திற்காக கடைகளில் விற்கப்படும் விசேஷமான வாழ்த்து அட்டைகளை வாங்கி நண்பர்களுக்கு அனுப்பி வருகிறார்கள். தொலைத்தூரத்தில் இருப்பவர்கள் தங்கள் செல்போன் மூலம் நண்பர்களை தொடர்பு கொண்டு வாழ்த்துகளை தெரிவித்தும், செல்போன்களில் இருந்து எஸ்.எம்.எஸ்.களை அனுப்பியும் தங்கள் நட்பை உறுதி செய்யும் தினமாக இந்த நாளை பயன்படுத்திக்கொள்வதை வழக்கமாக கொண்டு உள்ளனர்.
நண்பர்களுக்கு வாழ்த்து
விலை உயர்ந்த பொருட்கள், வித விதமான பரிசுகள், வாட்சுகள், புத்தகங்கள் ஆகியவற்றை தங்கள் அன்பின் அடையாளமாக நண்பர்களுக்கு பரிசளிப்பார்கள். இதற்காக ஏராளமான கல்லூரி மாணவ-மாணவிகள் பலர் சென்னையில் உள்ள முக்கிய ஷாப்பிங் கடைகளில் நேற்று முகாமிட்டு தங்கள் நண்பர்களுக்கு தேவையான பொருட்களை தேர்வு செய்யும் காட்சிகளை காண முடிந்தது.
பெரும்பான நண்பர்கள் ரோஜா மலரை பரிசளித்து வாழ்த்து கூறுவதே வழக்கமாக கொண்டு உள்ளனர். எல்லாவற்றையும் விட இன்று(ஞாயிற்றுக்கிழமை) அதிகாலையிலே நண்பர்களை தொடர்பு கொண்டு வாழ்த்து கூறுவதே சிறந்த பரிசாக பலரும் கருதுகின்றனர்.
கைகளை குலுக்கி
இன்று(ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை நாள் என்பதால் பள்ளி-கல்லூரி மாணவ-மாணவிகள் நேற்றே நண்பர்கள் தினத்தை கொண்டாடிய காட்சிகளை காண முடிந்தது. அவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் கைகளை குலுக்கியும், கட்டிப்பிடித்தும் தங்கள் அன்பை தெரிவித்துக்கொண்டனர். மேலும் பலர் தங்கள் நண்பர்களுக்கு அழகிய பரிசுகள் அளித்தும் தங்கள் ஆனந்தத்தை வெளிப்படுத்தினர்.
 
உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதத்தின் முதல் ஞாயிற்றுக் கிழமை, நண்பர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தாயன்புக்குப் பிறகு உலகில் உள்ள எல்லா உறவுகளை விடவும் நட்பு தான் உயர்ந்ததாக மதிக்கப்பட்டு வருகிறது. உலகில் உண்மையான நட்புக்கு ஈடு, இணை எதுவும் கிடையாது. இக்காலத்திலும் நட்பினை கவுரவப்படுத்துவதில் பலரும் ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். தற்போதைய நாகரீக யுகத்தில், `மூழ்காத ஷிப்பே பிரண்ட்ஷிப்தான்என்று சொல்லி நட்பினை நண்பர்கள் கவுரவப்படுத்தி வருகிறார்கள். அந்த காலம் முதல் இந்த காலம் வரை நட்பை மையமாக வைத்து பல திரைப்படங்கள் உருவாகி வருகிறது. இத்தகைய நட்பினை பாராட்டுவதற்காக உலகம் முழுவதும் நண்பர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. கால போக்கில் தங்களை விட்டு பிரிந்து சென்று வேறு எங்கேயோ வாழ்ந்து கொண்டிருக்கும் நண்பர்களையும் நினைவு கூறும் தினமாகவும் இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டில், உலகம் முழுவதும் இன்று நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.
அந்த நாள் ஞாபகம்
உலகில் சின்ன தீவுகளில் வசிப்பவர்களும் சாதி, மத பாகுபாடு இன்றி அன்பின் அடையாளமாக நண்பர்கள் தினத்தை கொண்டாடி வருகின்றனர். வயதானாலும் நட்புக்கு என்றும் வயது இல்லை என்று கூறி அந்த நாள் பழகிய நண்பர்களை இந்நாளில் தொடர்பு கொண்டு, அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனேஎன்று ஆட்டம் போடும் நாளாகவும் இந்த நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.
ஏற்கனவே உயிருக்கு உயிராக நண்பர்களாக பழகி வருபவர்கள் கூட தங்கள் நட்பை பலப்படுத்திக்கொள்ள, தங்கள் அன்பை வெளிப்படுத்த நண்பர்கள் கையில் நட்பு கயிற்றை (பிரண்ட்ஷிப் பேண்ட்) கட்டி தங்கள் மகிழ்ச்சியை தெரிவிப்பார்கள்.
எஸ்.எம்.எஸ். மூலம்
மேலும் அவர்கள் நண்பர்கள் தினத்திற்காக கடைகளில் விற்கப்படும் விசேஷமான வாழ்த்து அட்டைகளை வாங்கி நண்பர்களுக்கு அனுப்பி வருகிறார்கள். தொலைத்தூரத்தில் இருப்பவர்கள் தங்கள் செல்போன் மூலம் நண்பர்களை தொடர்பு கொண்டு வாழ்த்துகளை தெரிவித்தும், செல்போன்களில் இருந்து எஸ்.எம்.எஸ்.களை அனுப்பியும் தங்கள் நட்பை உறுதி செய்யும் தினமாக இந்த நாளை பயன்படுத்திக்கொள்வதை வழக்கமாக கொண்டு உள்ளனர்.
நண்பர்களுக்கு வாழ்த்து
விலை உயர்ந்த பொருட்கள், வித விதமான பரிசுகள், வாட்சுகள், புத்தகங்கள் ஆகியவற்றை தங்கள் அன்பின் அடையாளமாக நண்பர்களுக்கு பரிசளிப்பார்கள். இதற்காக ஏராளமான கல்லூரி மாணவ-மாணவிகள் பலர் சென்னையில் உள்ள முக்கிய ஷாப்பிங் கடைகளில் நேற்று முகாமிட்டு தங்கள் நண்பர்களுக்கு தேவையான பொருட்களை தேர்வு செய்யும் காட்சிகளை காண முடிந்தது.
பெரும்பான நண்பர்கள் ரோஜா மலரை பரிசளித்து வாழ்த்து கூறுவதே வழக்கமாக கொண்டு உள்ளனர். எல்லாவற்றையும் விட இன்று(ஞாயிற்றுக்கிழமை) அதிகாலையிலே நண்பர்களை தொடர்பு கொண்டு வாழ்த்து கூறுவதே சிறந்த பரிசாக பலரும் கருதுகின்றனர்.
கைகளை குலுக்கி
இன்று(ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை நாள் என்பதால் பள்ளி-கல்லூரி மாணவ-மாணவிகள் நேற்றே நண்பர்கள் தினத்தை கொண்டாடிய காட்சிகளை காண முடிந்தது. அவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் கைகளை குலுக்கியும், கட்டிப்பிடித்தும் தங்கள் அன்பை தெரிவித்துக்கொண்டனர். மேலும் பலர் தங்கள் நண்பர்களுக்கு அழகிய பரிசுகள் அளித்தும் தங்கள் ஆனந்தத்தை வெளிப்படுத்தினர்

கருத்துகள் இல்லை: