Pages

வெள்ளி, ஆகஸ்ட் 03, 2012

மீன் எண்ணெயின் மருத்துவக் குணம்

மீன் எண்ணெயின் மருத்துவக் குணம்
மீனிலிருந்து தயாரிக்கும் எண்ணெய் மருத்துவக் குணம் கொண்டது.
மீன் எண்ணெய் rickets & tuberculosis நோயாளிகளுக்கும் மிகவும் நல்லது. தீக்காயங்கள் மற்றும் புண்களுக்கு மருந்தாகவும் பயன்படுத்தலாம்.
மீன் எண்ணெயில் cods, halibut, shark liver oil என்று பல வகையுண்டு.
ஆனால் சுறா மீனிலிருந்து மடடும்தான அதிகளவில் எண்ணெய் தயாரிக்கப்படுகின்றது.
மீனிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் இரத்த புற்றுநோயை கட்டுப்படுத்தும் தன்மையுடையது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ரத்த புற்றுநோய்க்கு காரணமாக இருக்கும் திசுக்களை அழிக்கும் சக்தி உள்ளது என ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
இந்த ஆராய்ச்சியில் ரத்த புற்றுநோய் உள்ள எலிகளுக்கு 7 நாட்கள் இந்த சேர்மம் கொடுக்கப்பட்டது.
பின்னர் பரிசோதித்தபோது அந்த எலிகள் அனைத்தும் குணமடைந்து இருப்பது தெரிய வந்துள்ளது.
ரத்தத்தில் அணுக்களின் எண்ணிக்கை சரியான அளவில் இருந்தது என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மீன் எண்ணெய் இரத்த புற்றுநோயை கட்டுப்படுத்தும் 
மீனிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் இரத்த புற்றுநோயை கட்டுப்படுத்தும் தன்மையுடையது என இந்திய ஆராய்ச்சியாளர் சந்தீப் பிரபு கூறுயுள்ளார்.மீன்களில் உள்ள ஒமேகா-3 என்னும் அமிலத்தில் இருந்து தயாரிக்கப்படும் டெல்டா-12-ப்ரோடாக்லாண்டின் ஜே3 அல்லது டி12-பிஜிஜே3 என்ற சேர்மம் ரத்த புற்றுநோய்க்கு காரணமாக இருக்கும் திசுக்களை அழிக்கும் சக்தி உள்ளது என ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.இந்த ஆராய்ச்சியில் ரத்த புற்றுநோய் உள்ள எலிகளுக்கு 7 நாட்கள் இந்த சேர்மம் கொடுக்கப்பட்டது. பின்னர் பரிசோதித்தபோது அந்த எலிகள் அனைத்தும் குண்மடைந்து இருப்பது தெரிய வந்துள்ளது. ரத்தத்தில் அணுக்களின் எண்ணிக்கை சரியான அளவில் இருந்தது என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எல்லோரும் மீன் சாப்பிட வேண்டும்


எல்லோரும் மீன் சாப்பிட வேண்டும்

நாம் சத்துள்ள உணவுகளை சாப்பிட வேண்டும் . அப்போதுதான் திடகாத்திரமாக நோய் நொடியின்றி உயிர் வாழலாம் . காய்கறிகள் , பழங்கள், மீன் உணவுகள் சத்துள்ள உணவுகள் . அவற்றை நாம் நமது உணவில் சேர்த்து கொள்ள வேண்டியது அவசியம் . சிறு பிள்ளைகள் முதல் பெரியோர்கள் எல்லோரும் மீன் சாப்பிடலாம் .

மீன் நல்ல உணவாவதோடு, நோய்களுக்குக், குறிப்பாக இதய நோய்களுக்கு ஏற்ற மருந்தாகவும் செயல்படுகின்றது. வாரத்திற்கு இருமுறை மீன் உணவுகளுடன் கூடிய உணவு முறைகளைக் கடைப்பிடிப்போருக்கு, இதயத்தாக்கு வருவதற்கான வாய்ப்பு
பாதியாகக் குறைக்கப்படுகிறது. எனவே மீன் உணவுகளை தவிர்க்காதீர்கள் .

ஒட்டி மீன் , சீலா மீன் , விள மீன் , நெத்தலி , சூவாப்பாரை , பாரை, இப்படி பல மீன் இனங்கள் இருக்கின்றன . மீன் சாப்பிடுவது இதய நோயாளிகளுக்கு நல்லது. பனிப்பிரதேசத்தில் வாழும் எக்ஸிமோ மக்கள் கொழுப்பு சேர்ந்த உணவுப் பொருட்களைக் கணக்கு வழக்கில்லாமல் சாப்பிடுவார்களாம். எனவே, கொலஸ்ட்ராலுக்குப் பஞ்சம் இல்லை. நார்ச்சத்துள்ள உணவைக் குறைவாகவே உண்கிறார்கள். அப்படியும் அவர்களுக்கு அவ்வளவாக இதயநோய்கள் வருவதில்லையாம். எக்ஸிமோக்கள் சாப்பிடும் மீன்கள்தான் அவர்களை இதய நோயாளிகளாக்காமல் காப்பாற்றி வருகிறதாம் என்றால் பாருங்களேன் .

வளர்ந்த நாடுகளில் மட்டுமல்லாது, வளர்முக நாடுகளிலும் நிகழ்கின்ற மரணங்களுக்கு இதயத்தாக்கும், மூளைத்தாக்குமே பெரும்பாலும் காரணமாக இருப்பது தெரியவந்துள்ளது. மூளைத் தாக்கினால் இறப்பவர்களை விட இதயத் தாக்கினால் இறப்பவர்களின் எண்ணிக்கையே மிகுதியாக உள்ளது. மீன் மற்றும் மீன் பொருள்களை உணவில் கணிசமாகச் சேர்த்துக் கொள்வதன் மூலம் இவ்வகை இதயத் தாக்குகளைத் தவிர்க்கலாம் என்பதும் அண்மைக்கால ஆய்வுகளின் மூலம் தெரியவருகிறது.

மீன் உணவுகள் எமக்கு விட்டமின் சத்துக்கள் நிறைந்தவை . பாலூட்டும் தாய்மார்கள் கட்டாயம் மீன் சாப்பிட வேண்டும் . 100 - 200 கிராம் அளவு மீனை வாரம் இரண்டு அல்லது மூன்று முறை உணவில் சேர்த்துக் கொண்டால் அது இதய நோய்களைத் தவிர்க்க உதவும். மீன் சாப்பிடப் பிடிக்காதவர்கள், மீன் எண்ணெய் மாத்திரைகளை தக்க மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக் கொள்ளலாம்.

மீன்களில் காணப்படும் துத்தநாகம், செலினியம், பாஸ்பரஸ் போன்ற மணிச்சத்துக்கள் மூளை வளர்ச்சிக்கும், பொட்டாஷியம் இரத்த அழுத்தத்தை ஒரே சீராக வைத்திருப்பதற்கும் கல்சியம் வலுவான எலும்பு வளர்ச்சிக்கும், அயோடின், உடலின் வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்தவும் துணை நிற்கின்றன. இவை தவிர, சருமப் பாதுகாப்பளித்து, இரத்தவோட்டைத்தைத் தூண்டி செயல்படும் விட்டமின் E மீன்களில் தேவையான அளவு அடங்கியுள்ளது.

இதயநோய் காரணமாக உடற் பருமனைக் குறைக்க விரும்புவோருக்கு ஏற்ற வகையில் குறைந்த கலோரித் திறனையே மீன் தருகிறது. 100 கிராம் எடையுள்ள மீன் உணவை உண்கிற போது, கிடைக்கின்ற கலோரிகள் 100 -க்கும் குறைவானதுவே. மேலும் 100 கிராம் மீன் உண்ணும்போது கிடைக்கக்கூடிய கொழுப்பு 0.1 இருந்து 0.2 வரை மட்டுமே. நாம் ஏன் மீன்களை சாப்பிட வேண்டும் என்று விளங்குகிறது தானே . கல்சியம் குறைபாடு உள்ளவர்களுக்கு கூட மீன்கள் மிகவும் பயன் அளிக்கின்றன . எலும்பு வளர்ச்சிக்கும் பயன்படுகிறது .

நாம் மீன் சாப்பிடுவதால் பல பயன்களை அடைகிறோம் . உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. சருமநோய் வராமல் தடுக்கிறது. முடக்குவாதம், மூட்டுப்பிடிப்பு போன்ற எலும்பு தொடர்புடைய கோளாறுகளை நிவர்த்தி செய்கிறது. மூளை வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. அனைத்திற்கும் மேலாக, இதயத்தாக்கு வராமல் காக்கிறது. பார்த்தீர்களா மீன் உண்பதால் நாம் பெறும் நன்மை என்னவென்று.


ஒவ்வொருவரும் தங்கள் உணவில் சரியான விகிதத்தில் மீன் பொருட்கள் சேருமாறு கவனமுடன் திட்டமிடுவது அவசியம். இதன்மூலம் இதய நோய்கள் வராமல் காத்துக்கொள்ள முடியும். மேலும் மீன் இதயத்திற்கேற்ற அரிய உணவாக உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகளாலும், மருத்துவர்களாலும் ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது.மீன் எண்ணெயில் உள்ளஒமேகா_3’ என்ற பொருள் கொலஸ்ட்ராலைக் குறைப்பதோடு ரத்தம் உறையாமலும் பார்த்துக் கொள்கிறது. ரத்தம் சீராகப் பாயவும் உதவி செய்கிறது. ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது.

தாவர எண்ணெய்யையும், மீன் எண்ணெய்யையும் ஒப்பீட்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வின் மூலம், நான்கு வாரங்கள் மீன் எண்ணெய் உட்கொண்டவர்களின் கொலஸ்ட்ரால் அளவு அதே நான்கு வாரங்கள் தாவர எண்ணெய் எடுத்துக் கொண்டவர்களுடைய கொலஸ்ட்ரால் அளவை விட 5 மடங்கு குறைவாக இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. மீன்களின் ஒமேகா 3 எனப்படும் உயர்அடர்த்தி லிப்போ புரோட்டீன் மிகுந்தும் தாழ் அடர்த்தி புரோட்டீன் குறைந்தும் இருப்பதே இதற்குக் காரணம் எனவும் தெரியவந்துள்ளது.

இதய நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மீன் எண்ணெய் அடங்கிய பொருள்கள் பெரும்பாலும் பரிந்துரைக்கப்படுகின்றன. என்றாலும் மீன்களின் கல்லீரலில் இருந்து எடுக்கப்படும் காட்லிவர் ஆயில் மற்றும் ஷார்க் லிவர் ஆயில் போன்றவைகளில் உடலுக்கு நன்மை அளிக்கும் செறிவுறா கொழுப்பு அமிலங்களுடன் விட்டமின்களும் அடங்கியுள்ளன. மீன்களின் தசைகளிலிருந்து பெறப்படும் எண்ணெயில் இவ்விட்டமின்கள் மிகுதியாக இருப்பதில்லை. எனவே இதய நோயுற்றவர்கள்
இவ்வகை மீன் எண்ணெயை உட்கொள்வது நல்லது.

எனவே மீன்கள் எல்லோருக்கும் நல்லது . சத்துக்கள் நிறைந்தது . நோய்கள் வராமல் தடுக்க கூடியது . சத்துள்ள மீன் வகைகளை உண்டு வாழுங்கள் . எல்லோரும் மீன் உண்பதை தவிர்க்காமல் மீன் உணவுகளை உண்ணுங்கள்

கருத்துகள் இல்லை: