எண்ணங்களைக் கட்டுப்படுத்தி வெற்றி காணும் வழிமுறைகள்
1. ஒரு முட்டைக்குள் தங்கம் மறைந்திருக்கிறது என்று கற்பனை செய்யுங்கள். இனி ஒவ்வொரு பிரச்சனையையும் ஒரு முட்டையாகக் கற்பனை செய்யுங்கள். அதற்குள் ஒரு தங்கம் மறைந்திருக்கிறதாக நினையுங்கள், இதுவே பிரச்சனையை வெற்றியாக்கும் வழியாகும்.
02. ஒரு பிரச்சனையைத் தீர்ப்பதற்கு 20 வழிகள் இருக்கின்றன என்று கூறுகிறார்கள். முதலில் ஐந்து வழிகளை தேர்வு செய்யுங்கள், தேடலை ஆரம்பியுங்கள் அதிலிருந்து புதிதாக 20 வழிகள் பிறக்கக் காண்பீர்கள். இதுதான் படைப்பாற்றல் அதாவது படைப்பாற்றலின் தாயே புதிய சிந்தனைதான்.
03. ஒரு பிரச்சனையை வேதனை என்று கருதாதீர்கள் அப்படிக் கருதினால் அந்த வேதனையை உங்கள் பிள்ளைகளுக்கு கொடுத்துவிடுவீர்கள். பிரச்சனையை ஒரு முட்டையாகவும் அதில் தங்கம் மறைந்திருக்கிறது என்றும் நினைத்தால் நீங்களே அந்தப் பிரச்சனைக்கு தீர்வைக் காண்பீர்கள்.
04. உங்கள் மனதை சுறுசுறுப்பாக்க 20 வழிகளைக் காணுங்கள், அதுபோல சேம்பேறிகளாக இருக்கும் பிள்ளைகளின் மனதையும் உற்சாகமாகத் தூண்டி விடுங்கள்.
05. ஆர்வமும் துடிப்பும் உள்ள சக்தியை நீங்கள் உருவாக்கினால் உங்கள் குடும்பம் பயனுள்ள ஓர் இலட்சியத்தை அடையும்.
06. நீங்கள் வார்த்தைகளை கடுமையாக உச்சரித்தால் அன்பு என்ற மலர் கசங்கிவிடும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
07. வெறுப்பு என்பது கூடாத செயல் அது நமது எண்ணத்தில் இருந்துதான் பிறக்கிறது, வெறுப்பு வரும்போதெல்லாம் உள்ளே கூடாத எண்ணம் ஒன்று ஓடுவதைக் கண்டு பிடியுங்கள்.
08. சுவர்க்கம் என்பது ஓர் இடமல்ல மன அழுத்தமில்லாத, இலேசாக, கனமில்லாத உணர்ச்சியை அனுபவிக்கும் நிலைதான் சுவர்க்கமாகும்.
09. நமது கையில் ஆண்டவன் தந்து புவிக்கு அனுப்பி வைத்திருக்கும் அறிவாயுதம் விலை மதிப்பற்றதாகும், அதைப் பயன்படுத்தாவிட்டால் கழுதை சந்தனக்கட்டையை சுமந்து சென்று அதன் வாசம் புரியாமலே ஒரு நாள் செத்தது போன்ற கதையாகிவிடும்.
10. ஓர் எண்ணத்தை நல்ல முறையிலும் தெரிவிக்கலாம் கூடாத முறையிலும் தெரிவிக்கலாம், நல்லது கெட்டது நாம் தெரிவிக்கும் முறையாலும் தீர்மானிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக