Pages

வியாழன், நவம்பர் 26, 2015

ஃபேஸ்புக்கிலும் ஏராளமான கட்டுரைகளை எழுதியுள்ளார்.

ஃபேஸ்புக்கில் 'ஆரோக்கியம் & நல்வாழ்வு' எனும் உடல்நலன் சார்ந்த இணையக் குழுமத்தை நடத்தி வருபவர். இக்குழுவில், ஆதிமனிதன் உண்ட உணவை ஒட்டிய உணவுமுறை மூலம் சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, உடல் பருமன் போன்ற பல நோய்கள் மற்றும் உடல் சார்ந்த பிரச்னைகளுக்குமான டயட் முறைகளும் தீர்வுகளும் விவாதிக்கப்பட்டு வருகின்றன.

இந்தக் குழுவில் சுமார் 20,000 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். பலரும் இந்த உணவு முறையால் நல்ல பலனைக் கண்டுள்ளார்கள். பேலியோ டயட் (முன்னோர் உணவு) என ஆங்கிலத்தில் அழைக்கப் படும் இந்த உணவுமுறை, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் பெருமளவில் பின்பற்றப்பட்டு வருகிறது.

நியாண்டர் செல்வன், பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் துறையில் முனைவர் பட்டம் பெற்று, அமெரிக்காவில் நிர்வாகவியல் துறையில் ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். வரலாறு, உணவு, உடல்நலன், அறிவியல் போன்ற துறைகளைப் பற்றி கடந்த பத்து ஆண்டுகளாக வலைப்பதிவிலும், ஃபேஸ்புக்கிலும் ஏராளமான கட்டுரைகளை எழுதியுள்ளார்.
  

கருத்துகள் இல்லை: