Pages

செவ்வாய், ஏப்ரல் 28, 2015

ஆன்மிகம் என்றால் என்ன ?.....ஒரு சிறு விளக்கம்

ஆன்மிகம் என்றால் என்ன ?.....ஒரு சிறு விளக்கம்
 மனிதன் எப்பொழுதும் மகிழ்ச்சியாகவும் நிறைவாகவும் இருக்கவே விரும்புகிறான்.அவன் செய்யும் ஒவ்வொரு செயலும்  இந்த இலக்கை நோக்கியே இருக்கின்றன.
ஆனால் நாம் இயல் வாழ்க்கையில் காண்பது என்ன ?
பொதுவாக மனிதர்கள் மகிழ்ச்சியாக காணப்படுவதில்லை.நீங்கள் ஒரு பத்து பேரிடம்  கேட்டு பாருங்கள் .நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா  என்று.
எதோ வழக்கை ஓடிக்கொண்டு இருக்கிறது ....என் கஷ்டங்கள் எப்பொழுது முடியுமோ...
மனைவி மீது குறை,கணவன் மீது குறை,பெற்றோர் மீது குறை,செய்யும் வேலையில்  குறை ...எதாவது ஒரு குறை கூறாத  மனிதர்களை காண்பது மிக மிக அரிது. 
நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்..எனக்கு என்ன குறை..இறைவன் எனக்கு எல்லாம் அளித்து 
இருக்கின்றான் என்று ஒருவர் கூட கூற மாட்டார்கள்.  
என்ன காரணம் என்று எண்ணி பார்க்கலாம்.இங்கு நன்றாக கூர்ந்து கவனிக்க வேண்டும்.
நாம் நிரந்தரமான மகிழ்ச்சியையும் நிறைவையும் நிரந்தரமற்ற உலகத்திடம் எதிர்பார்கிறோம்.
இங்கு உலகம் என்பது நாம் அனுபவிக்கும் பொருள்கள்,நம் சொந்தங்கள்,நண்பர்கள் அனைத்தையும் 
குறிக்கும். 
ஒரு பொருளை நாம் அடையும் பொழுதோ அல்லது ஒரு நிகழ்ச்சி நமக்கு சாதகமாக அமையும் பொழுதோ நாம் அடைவது  உண்மையில் மகிழ்ச்சி அல்ல.ஒரு சிறு காலகட்டம் நம் மனதில் எந்த 
எதிர்பார்ப்பும் இல்லை,அவ்வளவுதான்.இந்த மகிழ்ச்சி எவ்வளவு காலம் நீடிக்கிறது?மிக மிக சிறிய காலமே...
நம் மனதில் கண் இமைக்கும் நேரத்தில் மற்றொரு ஆசை தோன்றும் வரை,மற்றும் நம் அண்டை 
வீட்டார்,நம் எதிரிகள்,நமக்கு விருப்பம் இல்லாத உறவினர்கள்,நண்பர்கள் நம்மை விட முன்னேற்றம் 
அடைந்தால்,நம் மகிழ்ச்சி மறைந்து விடுகிறது. நம் வாழ்க்கைத்துணை அல்லது நம் உறவினர், நண்பர்கள் நம் விருப்பத்திற்கு மாறாக நடந்துகொண்டால் நாம் மிக வருத்தம் அடைகின்றோம்.
மகிழ்ச்சி என்பது ஒரு பொருள்ளில் அல்லது உறவினரிடத்தில் அல்லது நண்பர்களிடத்தில் இல்லை.
மகிழ்ச்சி நம் மனதில் ஏற்படுவது. இவைகள் சில சமயம் நம்மிடத்தில் வரும்பொழுது மகிழ்ச்சி 
கொடுக்கலாம்  அல்லது நம்மை விட்டு செல்லும்பொழுது மகிழ்ச்சி கொடுக்கலாம்.மகிழ்ச்சி என்பது மனதில் விருப்பு வெறுப்பு அற்ற ஒரு சஞ்சலம் இல்லாத நிலை.அவ்வளவுதான்.

இதில் அடிப்படை தவறு என்னவென்றால் நாம் இந்த மகிழ்ச்சியை அல்லது மன சஞ்சலம் அற்ற நிலையை வெளியே தேடுவது.இது பாலைவனத்தில் கானல் நீர் போல் தான்.கிடைப்பது போல் தோன்றும்,அனால் கிடைக்காது.. 

இந்த மகிழ்ச்சியை,மன நிறைவை நாம் நமக்கு உள்ளே நம் மனதில்,நம் இதயத்தில் தேட வேண்டும்.இந்த உள்நோக்குதல்தான் ஆன்மிகம்.
பல பேருக்கு ஆன்மிகத்தின் நோக்கம் என்ன என்றே தெரிவதில்லை.

ஆன்மிகம் என்றால் வீட்டில் அல்லது ஆலயத்தில் கடவுளை வணங்குவது,பக்தி பாடல்கள் பாடுவது,புண்ணிய தலங்களுக்கு செல்வது..
இவைகள்தான் ஆன்மிகம் என்று பலர் நினைத்துக்கொண்டு இருக்கின்றோம். இவை எல்லாம் ஆன்மிகத்தில் ஒரு படி,அவ்வளவுதான்.
ஆன்மிகத்தின் இறுதி நோக்கம் நம்மை நாமே அறிவது,நான் யார் என்று அறிவது,

நான் வெறும் உடலா,மனமா,என் இயற்கை தன்மை என்ன? எனக்கும் கடவுளுக்கும் என்ன சம்பந்தம்?இதை புரிந்து கொள்வதுதான் ஆன்மிகம்.

மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் ஆகாரம்,உறக்கம்,பயம்,இனப்பெருக்கம் - இவை யாவும் ஒற்றுமை.

ஒரே ஒரு வேற்றுமை,நல்லவை தீயவை என்று பிரித்து அறியும் பொது அறிவு மனிதர்களிடம் மட்டுமே உண்டு.நம் இந்த அறிவை வைத்துக்கொண்டுதான் நாம் யார் என்ற உண்மையை அறிய வேண்டும்.அதுதான் தன்னை அறிதல். அதுதான் தன்னை அறிதல்.அதுதான் ஆன்மிகம். 

கருத்துகள் இல்லை: