Pages

வியாழன், ஏப்ரல் 23, 2015

ஏழைகளின் ஆப்பிள் - பப்பாளி..!

ஏழைகளின் ஆப்பிள் - பப்பாளி!

பப்பாளி, மருத்துவ குறிப்பு, மருத்துவம்!

வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய விலை குறைவான பழம் ஏழைகளின் ஆப்பிள்' Mr.பப்பாளி. பப்பாளியின் அறிவியல் பெயர் - Carica papaya. இதன் பூர்வீகம் மெக்சிக்கோ. 

பப்பாளி மரம் பூக்க ஐந்து ஆண்டுகளாகும். இதிலே ஆண்மரம், பெண்மரம் என உள்ளது. ஆண்மரம் பூத்தும் பலன் ஏதும் இல்லை. பெண் மரம் பூத்தால் தான் அது காயாகி கனியாகும். பப்பாளி மரத்தின் இலை, காய், பழம், பால் எல்லாமே மருத்துவ பயன்கள் உடையது.

இதன் பயன்கள் மிக மிக அதிகம். மிக மலிவான விலையில் கிடைக்கும் மிக சத்துவாய்ந்த இந்த கனியானது தன் தகுதிக்கேற்ற இடஒதுக்கீட்டைப் பெறவில்லை என்பது தான் சோகம்.








பப்பாளி பல மருத்துவ குணங்களைக் கொண்டது. அவற்றில் ஒரு சில ...
பப்பாளிபழத்தில் உள்ள சர்க்கரை ரத்தத்தில் நேரடியாக கலப்பதில்லை. எனவே சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு கூட மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.

மருத்துவர்களுக்கு சவாலான வியாதிகளில் புற்றுநோயும் ஒன்று. இதற்கு சாதாரண பப்பாளி இலைச் சாற்றில் எதிர்ப்பு மருந்து இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. 

பப்பாளியிலுள்ள விதவிதமான என்சைம்களின் சேர்க்கை, புற்றுநோயைக் குணப்படுத்த வல்லது.
பொதுவாக குழந்தைகளுக்கும் இந்த பப்பாளிப்பழத்தைக் கொடுத்தால், உடல் வளர்ச்சிக்கு உதவுவதுடன் பல், எலும்பு என்பன வலுவடையவும் உதவும். குழந்தை பெற்ற பெண்கள் பப்பாளி சாப்பிட்டால் பால் நன்றாக சுரக்குமாம்.

அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நேரிடாது. எந்த வகையான தொற்று நோய் பரவினாலும், அது இவர்களை தாக்காது. 

பப்பாளி பழத்தில் இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் ஒரு வகை சத்து இருப்பதால் பப்பாளி பழத்தை சாப்பிடுபவர்களின் ரத்தத்தில் நோய் கிருமிகள் தங்கி நோயை உண்டு பண்ண வாய்ப்பில்லை.
பப்பாளி பழத்தை சரும பராமரிப்புக்கும் பயன்படுத்தலாம். வறண்ட மேல் தோலை அகற்றி, புதிய தோலை உருவாக்குகிற அற்புத சக்தி பப்பாளிக்கு உண்டு. 

பப்பாளி பழத்தை முகத்தில் மெதுவாகப்பூசி, நன்றாக மசாஜ் செய்யுங்கள். பிறகு மிதமான சுடுநீரில் கழுவுங்கள். முகம் பளிச் என்று பிரகாசிக்கும்.பல் சம்மந்தமான குறை பாட்டிற்கும், சிறு நீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும் பப்பாளி சாப்பிட்டால் போதும். 

பப்பாளியின் இலைகளும் வேர்களும் சிறுநீர் பெருக்கியாகவும், பழமானது மூலநோய்க்கும் பயன்படுத்தப்படுகிறது. நரம்புகள் பலப் படவும், பப்பாளியிலுள்ள 'பப்பாயின்' என்சைம்களில் 'ஆர்ஜினைன்' என்பது ஆண்களுக்கான ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடுங்கள்.நரம்புகள் பலப் படவும் பித்தத்தைப் போக்கி இதயத்திற்கு வலுசேர்க்கிறது. 

தேள் கொட்டினால் அவ்விடத்தில் இதன் விதையை அரைத்துப் பூசினால் விஷம் முறிந்துவிடும்.பப்பாளி இலையை கசக்கிச் சாறுபிழிந்து அதை தினமும் படர் தாமரையின் மேல் தடவி சிறிது நேரம் வைத்திருந்து கழுவி வர படர்தாமரை குணமாகும்.பப்பாளியை தினமும் சேர்த்துக் கொண்டால் நோயின்றி வாழ உதவும்.

கருத்துகள் இல்லை: