வாழ்வு முழுவதும் சோகம் என்றாலும் கலங்காதே.. உன் துக்கத்தினால் காலை உதயம் தன் அழகை இழந்துவிடாது.
03. தனக்குத்தானே திருப்தியடையாத ஒருவனால் உண்மையாகவே சந்தோஷமாக இருக்க முடியாது. சந்தோஷத்தை எந்த அரசாங்கத்தாலும் உங்களுக்கு தர முடியாது, அதை உங்களுக்கு நீங்களே செய்ய வேண்டும்.
04. ஒரு மனிதனுக்கு என்ன இருக்கிறது என்பதைவிட அவன் என்னவாக இருக்கிறான் என்பதே அவனுக்கு சந்தோஷத்தைத் தருகிறது.
05. பணத்தையோ, வெற்றியையோ பேராசையுடன் தேடாதீர்கள் அப்படிச் செய்தால் துன்பமே ஏற்படும். ஏனென்றால் இவை இரண்டும் உங்களுக்கு வெளியே இருக்கின்றவை.
06. சுவையான கருத்துக்களை சிந்திப்பவனே சந்தோஷமான மனிதனாகும்.
07. சந்தோஷத்தின் ஊற்றை தனக்குள்ளே அதிகம் காணக்காண மனிதன் அதிக இன்பமடைவான். மிக உயர்ந்த, நீடித்திருக்கும் இன்பங்கள் மனத்தில் இருந்துதான் உதயமாகின்றன.
08. எல்லோரும் சந்தோஷமாக இருங்கள் நீங்கள் நினைப்பதைப்போல காலம் இன்னமும் அதிகமாக இருக்காமல் போகலாம்.
09. வாழ்வை அனுபவிப்பதென்றால் அதற்கு இதுதான் நேரம். அது நாளையோ அடுத்த வருடமோ நாம் இறந்த பிறகோ வரப்போவதில்லை.
10. அடுத்த வருடம் சிறப்பாக வாழ்க்கை அமைய வேண்டும் என்றால் இந்த வருடம் முழுமையாக, மனத்திருப்தியுடன், சந்தோஷமாக, மன ஈடுபாட்டுடன் வாழ வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக