Pages

ஞாயிறு, ஆகஸ்ட் 18, 2013

வைர கிரகம் கண்டுபிடிப்பு!

வைர அட்டிகையை சீரியல் நடிகை சுமந்திருக்கக் கண்டாலே நம் நாட்டுப் பெண்களுக்கு இரண்டு நாட்கள் தூக்கம் தொலையும். வைரத்தாலேயே ஆன ஒரு கிரகம் இருப்பது அவர்களுக்குத் தெரிய வந்தால்...

என்ன மூச்சு முட்டுகிறதா?

நமது பூமியை போல இரண்டு மடங்கு அளவில், முழுவதும் வைரம் மற்றும் கிராபைட்டால் ஆன கிரகம் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள். 55 கான்க்ரி என்று அழைக்கப்படும் அந்த கிரகம் நமது பூமியைப் போலவே நமக்கு பக்கத்தில் இருக்கும் ஒரு நட்சத்திரத்தைச் சுற்றி வருகிறது. எவ்வளவு பக்கத்தில் என்று கேட்கிறீர்களா ? இருங்கள், வருகிறேன்...

அமெரிக்க மற்றும் பிரெஞ்சு ஆய்வாளர்களின் கூட்டு ஆராய்ச்சி குழு இந்த கிரகத்தை கண்டுபிடித்து உள்ளது. அந்தக் குழுவைச் சேர்ந்த நிக்கு மதுசூதனன், "பூமியின் வேதியியல் அமைப்பிற்கு அடிப்படையிலேயே தலைகீழ் மாற்றம் கொண்ட ஒரு கிரகத்தை இப்போதுதான் நாம் முதன்முதலில் கண்டுபிடித்துள்ளோம்" என்றார்.

ஓகே அது எங்கப்பா இருக்கு? எப்படி போவது என்ற கேள்விக்கு வருவோம்.

சென்னை லஸ் கார்னரில் 45 B பஸ் பிடித்து எட்டாவது ஸ்டாப்பில் இறங்கி இரண்டு தெரு தள்ளி ரைட்டில் திரும்பினால் ...மன்னிக்க...

அந்த வைர கிரகம் இருப்பது நமது பூமியிலிருந்து சுமார் நாற்பது மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில்... (ஒரு ஒளியாண்டு = 9,460,730,472,5808 கிலோ மீட்டர்கள் ) சோ, நாலு கோடி ஒளி ஆண்டு என்பது ....

அதுமட்டுமல்ல, அந்த கிரகத்தில் எப்போதும் சுமார் 2150 டிகிரி செண்டிக்ரேடில் உஷ்ணம் இருந்து கொண்டே இருக்குமாம். (இங்கே நாற்பது டிகிரிக்கு நாலு போவெண்டோ சாப்பிடறோம்!)

அது மட்டுமல்ல, அங்கு ஒரு வருடம் என்பது ஜஸ்ட் 18 மணி நேரம்தானாம்.. ஹலோ சார் எங்கே போறீங்க.. ஹலோ சார்...!

கருத்துகள் இல்லை: