ஜெர்மன் நாட்டின் மருத்துவப் புரட்சியாளர், மருத்துவச் சீர்திருத்தவாதி, ஹோமியோபதி மருத்துவத் தந்தை டாக்டர் ஹானிமன் ஒரு சிரஞ்சீவி (1755-1843). அவர் நிறுவிய புதிய மருத்துவ முறையின் பெயரை "ஹோமியோபதி" என்றார். அவர் காலத்தில் பின்பற்றப்பட்ட மருத்துவத்திற்கு "அலோபதி" என்று புதுப்பெயரிட்டார். இன்றளவும் இம்மேதை இட்ட பெயரை உலகம் பயன்படுத்தி வருகிறது. எனவே ஹானிமன் இன்றும் வாழ்கிறார்.
1810 இல் தமது வேதப்புத்தகமான (Bible of Homeopaths) ஆர்கனான் நூலை வெளியிட்டார். எனவே ஹோமியோபதியின் வயது 191. "நவீன மருத்துவம்" (Modern Medicine) என்ற பெயர் ஹோமியோபதிக்குத்தான் பொருந்தும். இதற்கு மாறாக, அலோபதி மருத்துவர்கள் தமது பாராட்மபரிய மருத்துவத்தை "நவீன மருத்துவம்" என்றும், ஹோமியோபதியை விஞ்ஞான அடிப்படையற்ற, மறைந்து வரும் பழைய மருத்துவம் என்றும் கூறுகின்றனர். எனவே ஹோமியோபதி மருத்துவ முறையில் அடைந்துள்ள வெற்றிகளை அலட்சியப்படுத்திப் பேசுகின்றனர்! அலோபதி மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர்கள் மருந்தில்லாத மாத்திரைகளை நோயாளிகளைச் சமாதானப்படுத்துவதற்காகக் கொடுக்கும் போது "ஹோமியோபதிக் டோஸ்" என்று கூறுவது வழக்கம். இருப்பினும் தற்போது ஹோமியோபதி மருத்துவத்தின் சிறப்பை அனுபவித்து கற்றுணர்ந்த அலோபதி மருத்துவர்கள் பலரும் ஹோமியோபதி மருத்துவர்களாக மாறியுள்ளனர். M.B.B.S பட்டம் பெற்ற சில மருத்துவர்களின் பெயர் பலகைகளில் "ஹோமியோபதி கிளினிக்" என்று காணப்படுகிறது. ஹானிமன் இன்றும் வாழ்கிறார்!
ஹோமியோபதியின் வித்து ஹானிமன் வாழ்ந்த காலத்திலேயே இந்திய மண்ணில் விழுந்து விட்டது. அதுவும் ஆங்கில ஆட்சியும் ஆங்கில மருத்துவத்தின் (அலோபதி) ஆதிக்கமும் இருந்த காலத்தில் பஞ்சாப், வங்காளம், தமிழ்நாடு ( தஞ்சை) ஆகிய பகுதிகளில் விதைக்கப்பட்ட ஹோமியோபதி மருத்துவம் இந்தியாவில் ஆல் போல் பரந்து அருகுபோல் வேரோடிவிட்டது. அமெரிக்க, ஐரோப்பிய ஹோமியோபதி மருத்துவ மேதைகளின் புத்தகப் பதிப்புரிமைகளை இந்தியர்கள் வாங்கிவிட்டனர். இந்தியாவில் தான் ஹோமியோபதிக்கென தனி மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. மருந்து தயாரிப்பு நிறுவனங்களும் இயங்கி வருகின்றன.
ஹானிமன் மருத்துவம் இந்தியக் கலாச்சாரப் பாரம்பரியத்திற்கு ஒத்து வருவதால் ஹோமியோபதிக்கு இந்தியாவில் ஒளிமயமான எதிர்காலம் நிச்சயம் உண்டு. இருப்பினும் உலகமயமாக்கல் (Globalisation) என்ற இயக்கத்தில் அலோபதி மருத்துவத்தின் ஆதிக்கம் ஓங்கி வருகிறது. பணக்கார நாடுகளுக்கு ஏற்றது அலோபதி மருத்துவம். இந்தியப் பாரம்பரியத்திற்கு எதிரானது. அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, உறைவிடம் ஆகியவைகளுக்காக அல்லாடும் ஏழை இந்தியக் குடிமக்களுக்கு ஏற்றது ஹோமியோபதி மருத்துவம்தான். உலகமயமாக்கலினால் நமது பாரம்பரிய மருத்துவ மூலிகைகளுக்கு ஆபத்து ஏற்பட்டு வருகிறது.
நேர் மருத்துவத் தத்துவம் மிகக் குறைந்த அளவு மருந்தை வலியுறுத்துகிறது. வீரியப்படுத்தப்படும் (Potency Drugs) மருந்தைக் கொடுக்கிறது. மனிதர்களிடம் பரிசோதனை செய்யப்பட்ட (Proved on Human Beings) மருந்துகளின் குணங்கள் நிரந்தரமானவை. மனநோயாளிகளிடம் இரக்கம் காட்டியவர் ஹானிமன். ஒரு குறிப்பிட்ட உறுப்பை மட்டும் குணப்படுத்துவது இயற்கை விதிகளுக்கு மாறுபாடானது. மனிதனின் கனவுக் குறிகள் உட்பட உடலை நுணுக்கமாக ஆராய்ந்து பதிவு செய்த பின்தான் ஹோமியோபதி மருத்துவர் மருந்தை நாடுவார். மருந்துகள் அனைத்தும் இனிப்பு உருண்டைகள் வடிவில், தூய வெண்ணிறத்தில் அமைந்துள்ளது. இது ஹோமியோபதிக்கே உரிய தனிச்சிறப்பு. சிக்கனம் இதன் அடிப்படையான பலம்.
இஞ்செக்ஷன், ஆபரேஷன், விலை உயர்ந்த மருத்துவக் கருவிகள், பரிசோதனைக் கூடங்கள் முதலியவற்றை பயன்படுத்தி சிகிச்சை செய்வது அலோபதி மருத்துவம். நோயாளிகளைப் பரிசோதித்து விட்டு மருந்தைக் கொடுத்து ஒரு ஹோமியோபதி மருத்துவர் குணப்படுத்திவிட முடியும். ஆனால் எதிர் மருத்துவத்தில் பல விதமான நவீனக் கண்டுபிடிப்புகளின் உதவியின்றி சிகிச்சை செய்ய முடியாது! இது கண்கூடாகக் காணும் உண்மை.
ஹோமியோபதி முறையின் தத்துவம் நியூட்டனின் புவியீர்ப்பு விசைத் தத்துவத்தைப் போல் நிரந்தரமானது . நோயின் பெயரைப் பற்றியோ, கிருமிகளைப் பற்றியோ ஹோமியோபதி கவலைப்படுவதில்லை. மாறாக உடலில் விமரிசையாக இயங்கும் இயற்கை ) சக்திக்கு ஆதரவாக மருந்துகள் மிகக் குறைந்த அளவில், வீரியப்படுத்திய பின் கொடுக்கப்படுகிறது. இதனால் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகி நோயைப் போக்குகிறது. ஹானிமனின் இந்தத் தத்துவம் அலோபதிக்கு முற்றிலும் எதிரானது. எனவே ஹோமியோபதி மருத்துவத்தில் குணமாகும் நோய்களை (Wonder Cures) அலோபதி மருத்துவர்கள் நம்ப மறுக்கிறார்கள்! "ஹோமியோபதி மருந்துகளில் மருத்துவச் சரக்கு இல்லை! எனவே வேலை செய்யாது" என்று வாய்கூசாது கூறுகின்றனர். பெனிசிலின் கண்டுபிடிக்கப்பட்ட போது, "சர்வரோக நிவாரணி" என்று புகழப்பட்டது. பிற்காலத்தில் அதன் அபாயகரமான பின்விளைவுகளைக் கண்டு ஒதுக்கப்பட்டது. இந்த மாதிரியான நிலை ஹோமியோபதியில் இல்லை. 100 ஆண்டுகளுக்கு முன் "புரூப்" செய்யப்பட்ட மருந்துகள் இன்றைக்கும் அற்புதமாக வேலை செய்கின்றன! காரணம், ஒத்தது ஒத்ததை குணப்படுத்தும் (Similia Simibilus Curantur) என்ற விஞ்ஞானப் பூர்வமான தத்துவத்தில் டாக்டர் ஹானிமன் வாழ்ந்து கொண்டிருக்கிறார். பல அற்புதமான நோய்களைக் குணப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக