உலகிலுள்ள ஒவ்வொரு உயிரினத்திற்கும் பார்ப்பதற்கு கண்கள் மிகவும் இன்றியமையாதவையாகும். அந்தவகையில் உயிரினங்களும் அவற்றின் கண்களும் தொடர்பான சில சுவாரஷ்சியமான சிறப்பியல்புகள் வருமாறு.....
உலகிலுள்ள உயிரினங்களில் மிகப்பெரிய கண்ணினைக் கொண்ட உயிரினமாக இராட்சத ஸ்க்விட்(Giant Squid) விளங்குகின்றது.
இதன் கருவிழியின் அகலமானது 18 அங்குலங்கள் ஆகும். அதாவது ஒரு தர்ப்பூசணியின் அளவினை ஒத்ததாகும்.
மனிதர்களுக்கு பிறப்பின்போது எந்த அளவில் கண்கள் இருந்ததோ, அதேஅளவிலேயே அவன் இறக்கும்வரை காணப்படும்.
எறும்புகளுக்கு இரண்டு கண்களே உண்டு. ஆனால் ஒவ்வொரு கண்களும் சிறியளவான பல கண்களைக் கொண்டுள்ளன. இது "கூட்டுக் கண்" என்றழைக்கப்படுகின்றது.
நாய்களால் சிவப்பு, பச்சை நிறங்களுக்கிடையிலான வித்தியாசத்தை உணரமுடியாது.(நிறக்குருடு)
பச்சோந்திகள் மற்றும் கடற் குதிரைகள், தமது கண்களால் ஒரே வேளையில் இரண்டு வித்தியாசமான திசைகளில் பார்க்க கூடிய இயல்பினைக் கொண்டுள்ளன. இதன் மூலம் அவை தமது எதிரிகளிடம் இலகுவில் மாட்டிக்கொள்வதில்லையாம்.
டொல்பின்கள் ஒரு கண்ணைத் திறந்தபடியே உறங்கும்.
தீக்கோழிகளின் கண்ணானது அதன் மூளையினை விடவும் பெரியதாகும்.வண்ணத்துப்பூச்சிக்கு எத்தனை கண்கள் தெரியுமா?... ஆம்.. வண்ணத்துப்பூச்சிக்கு 12000 கண்கள் உண்டு.
நத்தைகளின் கண் வெட்டப்பட்டால் மீண்டும் வெட்டப்பட்ட இடத்தில் புதியதொரு கண் உருவாகும்.
ஆடுகளின் கண்கள் செவ்வக வடிவிலான கருவிழிகளைக் கொண்டவையாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக