Pages

திங்கள், ஏப்ரல் 08, 2013

அறிந்துகொள்வோம்


மைக்ரோவேவ் ஓவன் வந்த கதை இரண்டாம் உலகப் போரின்போது விமானங்களையும், கப்பல்களையும் கண்டறிய உதவும் ரேடார்களில் மேக்னட்ரான் என்ற பொருள் பயன்படுத்தப்படுத்தப்பட்டது. அதன் அருகில் கைகளைக் கொண்டு சென்றால் குளிருக்கு இதமாக, வெதுவெதுப்பாக இருக்கும். பெர்சி ஸ்பென்சர் என்ற அமெரிக்கர் அப்படி அடிக்கடி குளிர் காய்வார். ஒருநாள் ஸ்பென்சர் குளிர்காய்ந்து கொண்டிருந்தபோது, அவரது சட்டைப் பாக்கெட்டில் இருந்த மிட்டாய் உருகிவிட்டது. அப்போதுதான் அவருக்கு, இதைச் சமையல் உபகரணமாகப் பயன்படுத்தலாமே! என்று தோன்றியது. ஸ்பென்சரும், அவரது உதவியாளர்களும் தங்கள் ஆராய்ச்சியைத் தொடர்ந்தனர். பாப்கார்ன், பன்றி இறைச்சி போன்றவற்றைக் கொண்டு பரிசோதித்தார்கள். ஓவனுக்குள் வைக்கப்பட்ட அவை, நன்றாகச் சமைக்கப்பட்டிருந்தன. இதையடுத்து, வர்த்தகரீதியாக மைக்ரோவேவ் ஓவன்கள் தயாரிக்கத் தொடங்கப்பட்டது. 1953-ம் ஆண்டில் உரிமம் பதிவு செய்யப்பட்டு, ஏழே ஆண்டுகளில் உலகின் வசதிமிக்க சமையலறைகளில் நுழைந்துவிட்டது மைக்ரோவேவ் ஓவன்.


டால்பின்கள் ஒரு கண்ணை மட்டும் திறந்து கொண்டே தூங்கும்.
வரிக்குதிரை நின்று கொண்டேத் தூங்கும். மாடுகள்,ஒட்டகங்கள் அசை போட்டுக் கொண்டேத் தூங்கும்.
கோழிகள் நின்று கொண்டேத் தூங்கும்.
குரங்குகள் மரத்தில் தொங்கியபடியேத் தூங்கும்.

பிரசவிக்கும் ஆண் மீன்!
மீன் இனத்தைச் சேர்ந்த உயிரினம் கடல்குதிரை. முதலைக் குட்டியைப் போலிருக்கும். ஆண் கடல் குதிரையின் வாலின் கீழே பை போன்ற அமைப்பு இருக்கும். ஆண் கடல் குதிரைகளின் இந்தப் பையில்தான் பெண் கடல் குதிரைகள் முட்டையிடுகின்றன. முட்டைகள் பொரிவதும் வெளிவரும் குஞ்சுகள் சிறிது காலம் வளர்வதும் இந்தப் பையில்தான். முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளிவரும் நேரத்தில் ஆண் கடற்குதிரைக்கு பிரசவ வலி வரும். அப்போது அது நீருக்கடியில் உள்ள புதற்களுக்கிடையே கிடந்து மிகவும் சிரமப்படும். உடலை முன்னும் பின்னுமாக அசைத்து வளைக்கும். இப்படி வளையும்போது பையின் தசைகள் விரிவடையும். ஒவ்வொரு முறை வளையும்போதும் ஒவ்வொரு குஞ்சு வெளிவரும்.

கருத்துகள் இல்லை: