மனதில் வார்த்தைகள் தோன்றினாலும் பேச வாயிருந்தாலும் ஆண்கள் சில விஷயங்களை பெண்களிடம் தெரிவிக்கத் தயங்குகிறார்கள்.பெண்களிடம் ஆண்கள் பல சில விஷயங்களை சொல்லத் துடிப்பார்கள். ஆனால் சொன்னால் எங்கே பிரச்சனையாகிவிடுமோ என்ற பயத்திலேயே சொல்ல மாட்டார்கள்.அவ்வாறு ஆண்கள் பெண்களிடம் சொல்லத் தயங்கும் 9 விஷயங்களைப் பார்ப்போம்.
1. கை நிறைய சம்பாதித்தாலும் அதை ஆண்கள் தங்கள் காதலியிடம் சொல்ல மாட்டார்கள். அப்படியே வற்புறுத்திக் கேட்டாலும் பேச்சை மாற்றிவிடுவார்கள். எங்கே சம்பளத்தை வைத்து தன்னை காதலி மதிப்பிட்டுவிடுவாளோ என்ற பயம் தான் அதற்கு காரணம்.
2. என்ன கன்ட்ராவி புத்தகத்தை படிக்கிறாய். உனக்கு வேறு புத்தகமே கிடைக்காதா என்று கேட்கத் தோன்றினாலும் நல்ல புத்தகம் படி என்றே கூறுவார்கள்.
3. உறவில் ஈடுபடும்போது மனதில் வேறு ஒரு பெண்ணை நினைத்துக் கொள்வதை ஆண்கள் ஒரு நாளும் வெளியே சொல்வதில்லை. உண்மையைச் சொல்லி யார் அடி வாங்குவது.
4. என்ன டிரெஸ் போட்டிருக்க, நீயும் உன் ரசனையும். மேக்கப்பை பார் பேய் மாதிரி இருக்கு என்று சொல்லத் தோன்றினாலும் வாவ் டிரெஸ் சூப்பர், மேக்கப் கூட கரெக்டா இருக்கு என்பார்கள்.
5. 5 நிமிடத்திற்கு ஒரு முறை போன் செய்து உயிரை வாங்காதே என்று பல ஆண்களுக்கு கத்தணும் போல இருக்கும். ஆனால் போன் பணணவில்லையென்றால் உறவு கட்டாகிவிடுமே என்ற பயத்தில் கூற மாட்டார்கள்.
6. முன்னாள் காதலியைப் பற்றி இந்நாள் காதலி பேசுவது ஆண்களுக்கு பிடிப்பதில்லை. அவள் தான் இப்போ என் வாழ்க்கையில் இல்லையே வேறு ஏன் அவளைப் பற்றியே பேசுகிறாய், உனக்கு வேற பேச்சே கிடைக்காத என்று கேட்கத் தோன்றினாலும் அதை கூறத் தயங்குவார்கள்.
7. இந்த காரியத்தை இப்படி செய், அந்த சூழ்நிலையில் இப்படி நடந்துகொள் என்று காதலி அறிவுரை கூறும்போது உன் வேலையைப் பார்த்துக்கிட்டு போ, எனக்கு எப்போ என்ன செய்ய வேண்டும் என்று தெரியும் என்று கூற நினைத்தாலும் மௌனமாக இருப்பார்கள்.
8. ஆண்கள் தங்களுக்கு எப்பொழுது தோன்றுகிறதோ அப்போது நண்பர்களை வீட்டு்ககு அழைப்பார்கள். அதை கடைசி நிமிடத்தில் தான் மனைவி அல்லது காதலியிடம் தெரிவிப்பார்கள். அதை கேட்டு பெண்கள் இப்படி கடைசி நிமிடத்தில் சொல்றதே உங்களுக்கு வேலையாப் போச்சு என்று சாமியாடுவார்கள். அப்போது என் நண்பர்கள், நான் எப்பொழுது வேண்டுமானாலும் அவர்களை வீட்டுக்கு அழைத்து வருவேன் என்று நச்சென்று பதில் கூற விரும்பினாலும் அதை மனதுக்குள்ளேயே சொல்லிக் கொள்வார்கள்.
9. நீ கூப்பிட்ட உடனே அந்த இடத்திற்கு வர எனக்கு வேறு வேலையே இல்லையா என்று பெண்களிடம் கேட்க நினைத்தாலும் அதை கேட்கும் துணிச்சல் பெரும்பாலான ஆண்களுக்கு வருவதில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக