Pages

வியாழன், ஜனவரி 17, 2013

உடல் பருமனை குறைக்க அற்புத உடற் பயிற்சி: No வியர்வை.. No வலி

உடல் பருமன் என்ற கவலையா? விரும்பிய ஆடைகளை அணிய முடிவதில்லையா? உங்கள் பெயரின் முன் குண்டன்.. தடியன்… என்ற அடைமொழி ஒட்டிக்கொண்டுள்ளதா?
இனிமேல் கவலை இல்லை. அற்புத உடல் குறைப்பு உடற்பயிற்சி வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதை வீட்டில் இருந்தே செய்யலாம், ஒரு பைசா செலவில்லை…. வியர்வை இல்லை, உடல் வலி இல்லை…
இதை உங்கள் அன்றாட வாழ்வியலோடு இருந்தபடியே செய்யலாம் என்பது மேலதிக சிறப்பு.
அவ் உடற்பயிற்சி செய்யும் முறை படி படியாக தரப்படுகிறது.
படி 01:
அமைதியாக மனதை ஒரு நிலைப்படுத்தவும்.
படி 02:
தலையை நேராக வைத்துக்கொள்ளுங்கள்.
படி 03:
தலையை வலது புறம் திருப்புங்கள்.

படி 04:
கவனத்தை சிதற விடாது தலையை இடப்புறம் திருப்புங்கள்.


அவ்ளோ தான்…. வேலை முடிந்தது….
இவ் உடற்பயிற்சியை யாராவது உங்களை பீட்சா, பர்கர், ஹோட் டாக், பொடாட்டோ சிப்ஸ், சோடா, ஐஸ் பானம், ஐஸ்கிறீம், பீர், இனிப்பு பண்டம், டீ, காபி போன்றவற்றை உண்ண அழைக்கும் போது செய்தீர்களானால் ஆறே மாதங்களில் நீங்கள் ஸ்லிம் ஆவது உறுதி.

கருத்துகள் இல்லை: