கணனி உற்பத்தியில் முதல்வனாகத் திகழும் அப்பிள் நிறுவனம் தனது புதிய உருவாக்கத்தில் அமைந்து iMac கணனிகள் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது.இவை முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட கணனிகளிலும் பார்க்க மிகவும் மெல்லிய தோற்றத்தை(ultra thin) கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதாவது இவற்றின் தடிப்பானது வெறும் 5 மில்லி மீட்டர்களாக காணப்படுகின்றது. இது முன்னைய கணனிகளின் தடிப்பை காட்டிலும் 80 சதவீதம் குறைந்த அளவாகக் காணப்படுகின்றது.
மேலும் இவை 21 அங்குலம் மற்றும் 27 அங்குமுடைய திரைகளைக் கொண்டுள்ளதாக வெளிவர இருப்பதோடு Core i5, Core i7 ஆகிய Processor-களை உள்ளடக்கியுள்ளன.
தவிர இவற்றின் துணை நினைவகமானது SSD அல்லது Fusion Drive-னை அடிப்படையாகக் கொண்டு காணப்படுவதோடு, பிரதான நினைவகமான RAM-இன் Memory அளவை 32GB வரை அதிகரிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இக்கணனிகள் எதிர்வரும் டிசம்பர் மாதமளவில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக