Pages

திங்கள், டிசம்பர் 17, 2012

கொசுக் கடியிலிருந்து தப்பிக்க

கொசுக் கடியிலிருந்து தப்பிக்க...

இந்த பாழாய் போன கொசுவிடமிருந்து தப்பிக்க நானும் எவ்வளவோ சித்து வேலைகளை செய்து பார்த்தும் முடியவில்லை. நம்மை பாடாய் படுத்துகிறது. இதில் இப்போ உயிர் கொல்லி டெங்கு கொசுவும் சேர்ந்து கொண்டது. நானும் கொசு வத்தி, லிக்யுட், பேட், என பலவிதத்திலும் போராடி அதனிடம் தோற்று விட்டேன். எதையும் சமாளிக்கும் ஆக்ரோஷத்துடன் அவைகள் படையெடுத்து வருகின்றன. மொத்தத்தில் தூக்கத்தை தொலைத்தவனாகி விட்டேன்.
இந்த நிலையில் சென்னையில் பல இடங்களில் பிளாட்பாரங்களில் கொசு வலை பல சைஸ்களிலும் விற்பனை செய்கிறார்கள். அதையும் விசாரித்துப் பார்த்ததில் ரூ.650 விலை சொல்கிறார்கள். ஆனால் மலிவான தரமாக இருக்கிறது. உபயோகிப்பதிலும் பல சிரமங்கள் இருக்கிறது. மேலும் விசாரித்துப் பார்த்ததில் தற்செயலாக தெரிந்த நண்பருக்கு நண்பர் ஒருவர் நல்ல தரமான பொருட்களாலான Mosquito Net விற்பனை செய்வதாக அறிந்து சென்று பார்த்தேன். நல்ல வடிவமைப்பு. எளிதாக உபயோகப் படுத்தும் வகையில் அமைத்திருக்கிறார். நல்ல தரமான வலைத் துணி. விலை தான் சற்று தூக்கலாக தெரிகிறது.

6ftX4ft (double cot) sizeன் விலை ரூ.1700/
6X3(single cot) size ன் விலை ரூ.1500/ 
Fixed price.
விலை சற்று அதிகமானாலும் நல்ல தரமான Product ஆக இருக்கிறது. கட்டிலிலும், தரையிலும் உபயோகப்படுத்தும் விதத்தில் வடிவமைக்கப் பட்டிருக்கிறது.  முடிவாக இரண்டு சைஸ்களிலும் ஒன்று வீதம் வாங்கி வந்து உபயோகப் படுத்துகிறேன். நல்ல பலன் கொடுக்கிறது. நிம்மதியான தூக்கம். என்ன கொசுவுக்குப் பயந்து நாம் இரவு முழுதும் சிறையில் இருக்க வேண்டும். இதுவும் காலத்தின் கட்டாயம் போல.
நாம் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். வேறு எந்த வியாபார நோக்கமுமில்லை. உண்மையில் கொசுக் கடியால் அவதிபடுவோர் அவசிய தேவை இருந்தால் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். வாங்கி தருகிறேன். உங்களுக்கும் உதவி செய்தது போல் இருக்கும். விற்பனை செய்யும் நண்பருக்கும் உதவியது போல் இருக்கும். நம்ம part அவ்வளவே. கோவையில் விசாரித்ததில் விலை ரூ 100 வரை குறைவாக கிடைக்கின்றது. கோவை நண்பர்கள் அங்கேயே விசாரித்து வாங்கி கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை: