Pages

சனி, நவம்பர் 10, 2012

டைப் செய்ய கற்றுக் கொடுக்கும் இணையம்



டைப் செய்ய கற்றுக் கொள்ள நினைப்பவர்களுக்கு லெட்டர் பபில் என்ற இணையத்தளம் உதவி புரிகிறது.இந்த தளம் டைப் செய்வதற்கான பயிற்சியை ஒரு விளையாட்டாகவே மாற்றியிருக்கிறது. அதற்கேற்ப இதன் முகப்பு பக்க தோற்றமும் எளிமையான கணணி விளையாட்டு பக்கம் போலவே தோன்றுகிறது.
இந்த தளத்தில் நுழைந்ததுமே டைப் செய்யும் விளையாட்டுக்கான வழிமுறையும் விளையாட்டு நிலைகளும் தோன்றுகின்றன.
அவற்றில் விரும்பியதை தெரிவு செய்தால் திரையில் கண்ணாடி குமிழ்கள் தோன்றி கொண்டே இருக்கும். குமிழ்களில் தோன்றும் ஆங்கில எழுத்துக்களை பார்த்து அவற்றுக்கான விசையை அழுத்த வேண்டும். கண்ணாடி குமிழ்கள் தோன்ற தோன்ற அவற்றுக்கான விசையை தேடி அழுத்த வேண்டும்.
சரியான விசையை அழுத்துவதற்கு ஏற்ப ஒவ்வொரு நிலையாக முன்னேறி கொண்டே இருக்கலாம். ஒவ்வொரு நிலையிலும் எழுத்துக்களின் சவால் கூடிக்கொண்டே போவது சுவாரஸ்யம்.
இவ்வாறு மூன்று கட்டங்களின் விளையாட்டுக்கள் அதாவது பயிற்சி இருக்கின்றன. திறமைக்கேற்ப ஏதாவது ஒன்றை தெரிவு செய்து கொள்ளலாம்.
விளையாட்டாக இருப்பதால் எவருக்குமே முயன்று பார்க்கலாமே என்று தோன்றும். குமிழ்களை பார்க்கும் போது ஒருவித சவாலாகவே தோன்றும். இந்த இரண்டும் இணைந்து விளையாட்டில் மூழ்க வைக்கும். அப்படியே டைப் செய்வதில் வேகத்தையும் விவேகத்தையும்(பிழையின்றி டைப் செய்வது) ஏற்படுத்தி தரும்.
உறுப்பினராகும் வசதியும் இருக்கிறது. உறுப்பினராகமாலேயே டைப்ச் எய்யும் வசதியும் இருக்கிறது. ஆனால் உறுப்பினரானால் பல சிறப்பம்சங்களை அனுபவிக்கலாம்.
அதாவது டைப் செய்வதில் ஒருவரது முன்னேற்றத்தை தெரிந்து கொள்ளலாம். நண்பர்களை அழைத்து அவர்களோடு போட்டி போடலாம்.

கருத்துகள் இல்லை: