Pages

திங்கள், ஆகஸ்ட் 27, 2012

மாணவர்களுக்குப் பயனாகுகிற அகராதிகள் (இணையத்தில் மட்டுமே பயனாகுபவை)

 


கூகிள் தமிழ் - ஆங்கில அகராதியான இதில் சொற்களைத் தமிழில் தட்டச்சு செய்து சொடுக்கினால் அதற்குரிய பொருள் ஆங்கிலத்தில் தோன்றுகிறது. சொற்களுக்குரிய பொருள் சொற்களாகவும், தொடர்களாகவும் தோன்றுவதால் மாணவர்களுக்குத் தொடர்கள் உருவாக்குவதற்குரிய அடித்தளத்தை இந்த அகராதி ஆக்கும்


ஒருங்குறி தமிழில் தட்டச்சு செய்தால் அதற்குரிய பொருள் ஆங்கிலத்தில் வருகிறது. அச்சொல்லுக்குரிய பல பொருள்களைத் தருவது இதன் சிறப்பு. தொடக்க நிலை மாணவர்களுக்கு இந்த அகராதி பயனாகும். சொல்லுக்குரிய பொருளை அறிந்து உள்வாங்க இந்த அகராதி உதவும்.


இதில் தமிழ்ச் சொற்களை ஒருங்குறியில் தட்டச்சு செய்து தேடினால் அதற்குரிய ஆங்கிலப் பொருள், தமிழ்ப் பொருள் இரண்டும் விளக்கத்துடன் தோன்றுகிறது, அதுமட்டுமல்லாமல் இந்தச் சொல் உள்ள பாரதியார், திருவள்ளுவர், ஔவையார் பாடல் வரிகளையும் காட்டுகிறது. திரைபடப் பாடல் வரிகளையும் காட்டுகிறது. மேல் பகுதியில் தட்டச்சு செய்து சொடுக்கினால் கீழே பொருள் உள்ள பக்கம் உருவாகுகிறது. தமிழ்ச் சொற்களிலிருந்து தொடர்களை உருவாக்கும் நிலையில் உள்ள மாணவர்களுக்கு இந்த அகராதி பயனாகும்.


இந்த அகராதியில் தமிழ் / ஆங்கிலச் சொற்களைத் தட்டச்சு செய்து சொடுக்கினால், அதற்குரிய பொருள் புதிய பக்கத்தில் உருவாகிக் காட்சி தரும். இதில் சொற்களின் முன் மற்றும் பின் ஒட்டுகளுடன் சொற்கள் உருவாகுவதால் மாணவர்களுக்கு இது சொற்களஞ்சியம் பெருக்க உதவும்.


60 க்கும் மேற்பட்ட மொழிகளில் தட்டச்சு செய்தாலும் அதனை மொழிமாற்றம் செய்யப் பயனாகுகிற அரிய அகராதியை கூகிள் வடிவமைத்துள்ளது. இதில் எந்த மொழியிலிருந்து எந்த மொழிக்கு மாற்ற வேண்டும் என்பதை முறைப்டுத்திக் கொண்டு ஒருங்குறியில் சொற்களைத் தட்டச்சு செய்து சொடுக்கினால் அதற்குரிய மொழி மாற்றத்தை உடனடியாக அருகிலுள்ள கட்டத்திற்குள் காட்டுகிறது. தமிழ் மொழியையும் இந்த மொழிமாற்ற மென்பொருளில் இணைத்துள்ளது வாழ்த்துதற்குரியதே.
மாணவர்கள் தாங்கள் விரும்புகிற சொற்களை வலது புறத்தில் உள்ள கட்டத்தினுள் தட்டச்சு செய்து சொடுக்கினால் இடது புறத்தில் அதற்கான தமிழ்ச் சொல் தோன்றும். இதில் உள்ள சிறப்பு என்னவென்றால் இந்தச் சொற்களை இது படித்தும் காண்பிக்கும். முதல் நிலை மாணவர்கள் இதனைப் பயன்படுத்தலாம்.


இந்தத் தமிழ் லெக்சிகன் அகராதியில் தமிழ்ச் சொற்களை ஒருங்குறியில் தட்டச்சு செய்து தேடினால் அதற்குரிய பொருள் தோன்றுகிறது. வேர்சொல்லில் அமைந்த வேறு வேறு பொருளுடைய சொற்களையும் இணைத்துள்ளது. ஆய்வாளர்களுக்குப் பயனாகுகிற வகையில் அமைந்த அகராதி இது.


அகராதியில் உள்ள பட்டியலின் எழுத்துகளைத் தேர்ந்தெடுத்து, அந்த எழுத்தில் இணைக்கப்பட்டுள்ள சொற்களைச் சொடுக்கினால் அதற்குரிய பொருள் வருகிறது. மாணவர்களுக்குப் பயனாகும் அகராதி இது.


அகராதியில் உள்ள இடத்தில் ஆஙகிலத்தில் சொற்களைத் தட்டச்சு செய்து தேடினால், அந்தச் சொல்லுக்கான பொருள் தோன்றுகிறது. மாணவர்களுக்கும் பயனாகும் அகராதி இது.



கருத்துகள் இல்லை: